கைது செய்யப்படலாம்..?
சட்டவிரோத நிதி பரிமாற்றல் இடம்பெற்றதாக கூறப்படும் சி.எஸ்.என் தொலைக்காட்சியின் உயர் பதவியில் இருந்த யசாரா அபேநாயக்க கைது செய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசித்த ராஜபக்ஷ உட்பட 4 பேர் ஏற்கனவே கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment