Header Ads



சொத்து கிடைத்த விதத்தை தெளிவுபடுத்தாவிட்டால், யோஷித்தவுக்கு சிறை..!

யோஷித்த ராஜபக்ஸ கைது செய்யப்பட்டமை தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக அரச தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கருத்துத் தெரிவித்த மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜீத் பீ. பெரேரா

நிதி தூய்தாக்கல் சட்டத்திற்கு அமைவாகவே இடம்பெற்றுள்ளது. கறுப்பு பணம் என்பது திருடப்பட்ட பணம். குற்றவாளிகள் கறுப்பு பணத்தை கறுப்பு பணமாகவே வைத்திருக்க மட்டார்கள். அதனை மாற்றுவார்கள். அதுவே நிதி தூய்தாக்கல் எனப்படுகிறது. கறுப்பு பணத்தை சட்டபூர்வமான செயற்பாடுகளாக தெரியும் நிறுவனங்களில் முதலீடு செய்வார்கள். இது முதற்தடவையாக யோஷித்த ராஜபக்ஸ மற்றும் அவரது குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கோ குற்றச்சாட்டோ அல்ல. இந்த சட்டம் இதற்கு முன்னரும் இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சீ.எஸ்.என். எனப்படுகின்ற கால்டன் ஸ்போர்ட் நெட்வர்க் அலைவரிசை கறுப்பு பணத்தை தூய்தாக்கி அரச சொத்துக்களை தவரான முறையல் கையாண்டுள்ளது. 2015 ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதற்தடவையாக இந்த நிறுவனத்திற்கு எதிராக விசாரணை நடத்துமாறு நியாயமான சமூகத்திற்கான பிரஜைகள் என்ற அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது. பொலிஸ் விசாரணையில் பல்வேறு விடயங்கள் தெரியவந்துள்ளது. போலியான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வெளிநாடொன்றில் தவறான முறையல் ஈட்டப்பட்ட 2 தசம் மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் சி.எஸ்.என்.நிறுவனத்திற்காக முதலீடு செயப்பட்டுள்ளது. இருக்கும் சொத்து கிடைத்த விதத்தை தெளிவுபடுத்த முடியாவிட்டால் குற்றாவாளியாக காணப்படுவார். அதற்கமைய சிறைதண்டனை கிடைக்கும்.

1 comment:

  1. சிறை மட்டும்தானா. சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடமையாக மாற்றமாட்டாங்களா?

    ReplyDelete

Powered by Blogger.