மஹிந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் - எஸ்.பீ
ஒரு கட்சியில் இருந்த வண்ணம் புதிய கட்சியொன்றை ஸ்தாபிக்கின்றமை தொடர்பில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவரும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கட்சியின் ஆலோசகராக செயற்பட்டு வரும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் நீர்கொழும்பு - கொச்சிகடை பகுதியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்ட கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் எனினும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது என்பது அவசர முடிவு அல்ல.
“நேற்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டம் ஒன்று கொச்சிக்கடையில் நடைபெற்றது. இதில் 1400 உள்ளூராட்சி சபை ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளதாக வெளிவந்த தகவல்கள் பொய்யானது.
551 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும், கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோழ்வியடைந்த சில உறுப்பினர்களுமே நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
ஆனால் பெருந்திரளான உருப்பினர்கள் இதில் கலந்து கொண்டுள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த தகவல்கள் பொய்யானவை. பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 7 உள்ளூராட்சி சபை ஊழியர்கள் தமக்கு சார்பானவர்கள் என மகிந்த கூறிவந்த தகவல்களும் பொய்யானவையே.
இதுமட்டுமின்றி இந்த அரசாங்கம் சர்வதேசத்திற்கு நாட்டை காட்டிக்கொடுப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாகவும், இராணுவம் தவறிழைத்துள்ளதாக சர்வதேச விசாரணைகளில் உறுதிபடுத்துவதற்கும் அரசு முயற்சிப்பதாக மகிந்த ராஜபக்ஸ நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர் ஒன்றை மறந்து விட்டார். நாட்டிற்குள் முதன்முதலாக சர்வதேச விசாரணைகள் வந்ததும், மனித உரிமை மீரல்கள் பற்றி சர்வதேசம் பேசியதும் மகிந்த ராஸபக்ஸவின் ஆட்சிக் காலத்திலேயே ஆகும்.
பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது, மகிந்த மற்றும் பான் கீ மூன் இருவரும் ஒன்றிணைந்து ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தனர். இதன் பிறகே இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டதாக சர்வதேத்தில் போசப்பட்டது.” என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்த ஆள் பெற்றிக்கும் பாடுவார் கரண்டுக்கும் பாடுவார்
ReplyDeleteமுதல்ல இவனுக்கு எடுக்கனும்
Deleteமஹிந்தவின் தேவையே நாட்டினது தேவை
ReplyDeleteஅவரின் நலனே நாட்டினதும் அம்மக்களினதும் நலன்..
-மக்கு மஹிந்தரின் அகங்காரம்