யோசித்த வெளியே வருவாரா..?
பணச்சலவை குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ச உள்ளிட்டோர் மீது மேலும் ஐந்து கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை சட்டம், ஒழுங்கு மற்றும் தென்பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க நேற்று வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிவிப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிர்வாகத்தினர் பணச்சலவை போன்ற குற்றங்களில் மட்டும் தொடர்புபட்டிருக்கவில்லை.
போலி ஆவணங்கள் தயாரித்தல், நம்பிக்கை மோசடி, பொதுச் சொத்துக்கள் துஸ்பிரயோகம், சுங்க விதிகள் மீறல் உள்ளிட்ட குற்றங்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான குற்றப் பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் அமைச்சர் சாகல ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 11ம் திகதி யோஷித்த உள்ளிட்டோர் பிணையில் விடுவிக்கப்படும் சாத்தியம் குறித்து தகவல்கள் பரவியிருந்த நிலையில், அமைச்சர் சாகலவின் அறிவிப்பு அவர்களுக்கு பிணை வழங்கப்படும் சாத்தியத்தை நிராகரிப்பதாக அமைந்துள்ளது.
According to reports , non-bail offence has taken place but
ReplyDeletewithout the offence being charged , the perpetrators could be
bailed out ! Catching the wrongdoing is not enough , they should face the long arm of the law . We hope the govt will do the needful.