அரசுக்கு இனவாதிகளால், பல்வேறு சிக்கல்கள் உள்ளது - சம்பந்தன்
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஏற்படுத்தியுள்ள இந்த நல்லாட்சியில் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சியில் உச்ச அதிகாரத்துடன் சுயமாக வாழக்கூடிய ஒரு அரசியல் தீர்வை நிச்சயமாகப் பெறுவோமென எதிர்க்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவரான இரா. சம்பந்தன் நம்பிக்கை தெரிவித்தார்.
த.தே.கூட்டமைப்பு பிரித்தானியக் கிளை உயர்மட்டக் குழுவினரிடம் எதிர்க்கட்சித் தலைவரும் த.தே. கூட்டமைப்புத் தலைவருமான இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு நம்பிக்கை தெரிவித்தார்.
நல்லாட்சி ஏற்பட்ட பின்னர் ஏற்பட்டிருக்கும் நல்ல சந்தர்ப்பத்தை மிகக் கவனமாகவும் அவதானமாகவும் ராஜதந்திரமாகவும் பயன்படுத்தி எமது மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதாவது வட, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சியில் உச்ச அதிகாரத்துடன் சுயமாக வாழக்கூடிய ஒரு அரசியல் தீர்வை நிச்சயமாகப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் செயற்படுகின்றோம். நாம் எவ்வாறு அரசின் உயர்மட்டத்துடன் அணுகுகின்றோம், எதை எதை கதைக்கின்றோம் என்று அடிக்கடி மக்களுக்கு கூறிக் கொள்வது புத்தசாலித்தனமாகாது. அரசுக்கும் இனவாதிகளால் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. இதற்கிடையில் எமக்கு வாக்களித்தபடி உயர்ந்த அதிகாரப்பகிர்வுடனான அரசியல் தீர்வை கொடுத்தே ஆகவேண்டும். இதில் எமக்கு பூரண நம்பிக்கையுண்டு. இந்த நிலைப்பாட்டை புலம்பெயர் தமிழர்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என்று குழுவினரை இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.
எவ்வாறான உச்சமான அதிகாரம் கொடுத்தாலும் வடக்கும் கிழக்கும் இணைவது எவ்வகையிலும் சாத்தியமாகாது.வடகிழக்கு இணைப்பு விடயத்தில் இன்னுமொரு சிருபான்பை எதிர்காலத்தில் நசுக்கப்படுவதை அரசாங்கள் இப்போது சிந்துத்து செயற்பட வேண்டும். இவரின் இந்தக்கருத்தால் பெரும்பான்மை மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்ப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.முஸ்லிம் தலைமைகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ReplyDeleteNingal.eppadi sirupanmaikala.enkalodu.erunthu.kondu.perunpanmai.enaththavaral.tharaththai.thatti.kaliththal.sirupanmai.makkalin.pirachchanai.oru.nalum.thirathu.muthalil sirupanmai.makkalin pirachchanai.ottrumaiyaka.erunkal
ReplyDelete