தயவுசெய்து உதவுங்கள்..!
-Misnaaf-
"அல்லாஹ்விற்காக 3 நிமிடங்கள் இதை முழுமையாக வாசித்துவிட்டு இந்தப் பெண்ணிற்கு உதவுங்கள்"
காத்தான்குடியைச் சேர்ந்த ரஸ்மிலா (வயது 37) என்ற இந்தப் பெண்ணுக்கு ஒரு கண்ணில் பார்வையில்லாத நிலையில் தலையின் பிற்பகுதியில் ஒரு கட்டியும், முதுகில் பாரிய கட்டி ஒன்றும், வயிற்றுப் பகுதியில் பெரிய கல்லும் இருக்கின்ற நிலைமையில் நடக்கக்கூட முடியாமல் படுத்த படுக்கையிலேயே தனது காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார். வாழ வேண்டிய இப்பெண்மணி இத்தனை நோய்களோடு தனது இயற்கை கடமைகளை நிறைவேற்றுவதற்க்குக்கூட நக்கரித்தபடியே செல்லவேண்டியுள்ளது. இதைப்பார்க்கும் போது கல்நெஞ்சக்காரர்களின் உள்ளம்கூட உருகிவிடும் நிலையில் இந்தப் பெண்ணின் வாழ்க்கையுள்ளது.
நோய்கள் எதுவுமில்லாத திருமணமான ஆரம்பகாலத்தில் கணவனின் தாக்குதல்களின் காரணமாக கீழே விழுந்ததினால் இடதுபக்க கண்ணில் அடிபட்டு இக்கண்ணின் பார்வையை முற்றாக இழக்க நேரிட்டதோடு, இதே காரணத்தினால் முதுகில் ஏற்பட்ட பாரிய தாக்கத்தின் காரணமாக, முதுகிலும் கட்டி ஏற்பட்டு அது படிப்படியாக முற்றி, வயிற்றுப்பகுதி தலைப்பகுதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி, நடக்க முடியாத நிலைமைக்கு மாற்றிவிட்டது. இவை அனைத்தும் இப்போது "செங்கமங்கா" என்ற நோய்க்கும் இவரை ஆளாக்கி விட்டிருக்கின்றது. இப்பெண்ணின் கணவர் திருமணமாகி சிறிது காலத்திலேயே இவரையும், இவரது நான்கு மாதக் கைக்குழந்தையையும் கைவிட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
அண்மைக்காலம்வரை தனது நோயுற்ற, வயது முதிர்ந்த தந்தையின் பராமரிப்பில் இருந்த இவரினதும், இவரின் மகனினதும், வயதான தாயினதும் நிலைமை, தந்தையின் மரணத்திற்க்குப் பின், மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இவரின் சகோதரர்களும் அன்றாடம் கூலிவேலை செய்பவர்களாக இருக்கின்ற இவ்வேளையில், இவரின் தாய் செய்த இடியப்ப வியாபாரத்தை தாயின் நோயினால் செய்ய முடியாததினாலும், தன் தாயின் தொழிலுக்கு உதவியாயிருந்த தானும் நோயின் காரணமாக முற்றாத செயலிழந்து போனதாலும், இவர்களின் பொருளாதார நிலைமை மேலும் படுமோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, மூன்று வேளை உணவைக்கூட பெறமுடியாமல் உள்ளனர். அத்தோடு இந்த நிலைமையானது தனது 9ம் தரத்தில் கல்விபயிலும் மகனின் கல்வியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பெண்ணுக்கு செய்யவிருந்த சத்திர சிகிச்சை உயிருக்கும், பேச்சுத்திறனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என வைத்தியர்கள் கருத்து தெரிவித்த காரணத்தினால், சத்திர சிகிச்சையை செய்யாமல் தாமாகவே முன்வந்து, வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கிணங்க கையொப்பமிட்டுவிட்டு வைத்தியசாலையிலிருந்து வீடுதிரும்பி மீதமுள்ள வாழ்நாளை இத்தனை நோய்களோடும் கழிப்போம் என வீட்டிலேயே அமர்ந்துவிட்டார்.
இவரிடம் வீல்ச்செயார் உண்டு. ஆனால் அதில் ஏறி உட்காரவோ அல்லது அதை இயக்கவோ முடியாத நிலையில் உள்ளதோடு, ஊன்றுகோலின் உதவியுடனும்கூட எழுந்து நிற்க முடியாத நிலையிலும் இவரின் தற்போதைய நிலைமை உள்ளது. முடியுமான ஒரேயொரு காரியம் படுத்த படுக்கையில் இருந்து எழுந்திருப்பதும் தன் இயற்கை கடமைகளை நிறைவேற்ற நக்கரித்தடியே சென்று நிறைவேற்றுவதுமாகும்.
அன்பின் சகோதர சகோதரிகளே!
கண்ணீர் சிந்தக்கூடிய இப்பெண்ணின் துயரத்தையும், நோயையும் முற்று முழுதாக நம்மால் போக்க முடியாது. எல்லாம் வல்ல அழ்ழாஹ்வால் மட்டும்தான் இவரின் நோயைப் போக்கி, சுகத்தைக் கொடுக்க முடியும். ஆனால் இன்ஷா அழ்ழாஹ் நாம் மனது வைத்தால், மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட இந்தக் குடும்பத்தின் பசியைப் போக்கி, இப்பெண்ணினதும், அவரின் தாயாரினதும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய உதவி, மகனின் கல்விக்கும் உதவமுடியும்.
அதனடிப்படையில் இவர்களால் கடும் சிரமப்படாது செய்யக்கூடியதும், அன்றாடம் ஒரு கணிசமான வருமானம் பெறக்கூடியதுமானதொரு தொழிலை இனங்கண்டதில் வீட்டுடன் இவரது தாயினால் செய்ய முடிந்த ஒரு சில்லறைக்கடை ஒன்றை ஏற்படுத்தி அதனால் வரக்கூடிய இலாபத்தை இவர்களுடைய மேற்குறிப்பிட்ட தேவைகளுக்கு பயன்படுத்த நம்மால் முடிந்த உதவிகளை செய்வோமாக இருந்தால் அது நமக்கு அழ்ழாஹ்வின் அருளைப் பெற்றுத்தரக்கூடியதும், இரு உலகிலும் இன்ஷா அழ்ழாஹ் நமது நன்கொடைகளை பல மடங்குகளாக ஆக்கித்தரக்கூடியதுமாக அமையும்.
எனவே அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, உங்களால் முடிந்த உதவிகளை கீழ்க்குறிப்பிட்ட இந்தப் பெண்ணின் தாயாரின் வங்கிக் கணக்கிற்க்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்.
குறிப்பு: இப்பெண்ணின் அனுமதியுடனேயே இவரது புகைப்படத்தை நாம் இங்கு பிரசுரித்துள்ளோம்.
எல்லாம் வல்ல அழ்ழாஹ் உங்களுக்கு பறகத் செய்து, உங்களின் வாழ்க்கையை மேலும் செழிப்பாக்குவானாக. வஸ்ஸலாம்.
BANK DETAILS:
ACCOUNT NAME: SAALIYA UMMA
ACCOUNT NO. 819 300 3339
BANK: COMMERCIAL BANK
BRANCH: KATTANKUDY
could any body pls provide the contact No of blood relatives of Brothers and email ID if possible to approach with positive action in this case.
ReplyDelete