Header Ads



ஹிரா கல்வி மறுமலர்ச்சி நிறுவனம், முஸ்லீம் மாணவர்களின் கல்வி நலன்கருதி பங்களிப்பு

-பாறுக் ஷிஹான்-

ஹிரா கல்வி மறுமலர்ச்சி நிறுவனம் மீள்குடியேறிய முஸ்லீம் மாணவர்களின் கல்வி  நலன்கருதி பல்வேறு பங்களிப்புகளை இன்று (10) மாலை    யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் வைத்து வழங்கியது.

இந்நிகழ்வு நிறுவன ஸ்தாபகத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான  தேசமான்ய எம்.ஏ.சி.எம் அமீன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை நூல்தொகுதிகள் ஹதீஜா பெண்கள் பாடசாலை அதிபர் செல்வி ஜான்சி கபூர் வழங்கி வைத்தார். இதனை  ஆசிரியைகளான எச்.ஆபிதா  இஎஸ்.பர்ஜானா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மேலும் அல் ஹதீஜா பாடசாலைக்கு ஹிரா அமைப்பினால் நிழற்பிரதி இயந்திரம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.இதனை அதிபர் பெற்றுக்கொள்ள நிறுவனத்தின் ஸ்தாபகர் தேசமான்ய எம்.ஏ.சி.எம் அமீன்  தலைமையிலான குழவினர் வழங்கி வைத்தனர்.

அடுத்து மாணவ மாணவிகளின் நலன் கருதி இலவச  பிரத்தியேக வகுப்புக்களை இவ்வமைப்பு  ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் போது   அதிதிகளாக யாழ் ஒஸ்மானியா கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம் அஷ்ரப்  யாழ் ஹதீஜா மகளிர் கல்லூரி அதிபர் ஏ சி ஜான்ஸி யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன பொதுச்செயலாளரும் அதன் உறுப்பினருமான  ஆர் கே சுவர்கஹான்  கே கே எஸ் வீதி மஸ்ஜித் தலைவர் எம் யு எம் தாஹிர்  ஆகியோர்   கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வை ஹிரா கல்வி மறுமலர்ச்சி நிறுவன ஸ்தாபக தலைவர் எம் ஏ சி எம் அமீன்  பொருளாளர் ஏ எம் தையுப் உறுப்பினர் எம் ஐ ரொக்கீஸ் ஆகியோரும் இணைந்து ஏற்பாடு செய்தனர்.

ஹிரா கல்வி மறுமலர்ச்சி நிறுவனமானது 4 வருடங்களாக வட பகுதி முஸ்லீம் மக்களின் கல்வியில் அதிக பங்களிப்புகளை வழங்கி வருவதுடன் அதன்  தலைவராக டாக்டர்  எம்.ஏ சி எம் ரம்சி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.