Header Ads



இலங்கையைச் சேர்ந்த முஆத் ஹானுக், இங்கிலாந்தில் ஹாபிஸ் பட்டம் பெற்றார்


யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த ஹமீட் சுல்தான் ஹானுக் - ஸம்ரோஜா ஆகியோரின மூத்த புதல்வன் முஆத் ஹானுக் ஹாபிஸ் பட்டத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

இவருக்கான ஹாபிஸ் பட்டம் நேற்று சனிக்கிழமை 20-02-2016 அன்று இங்கிலாந்து - ஹரோவில் அமைந்துள்ள (மஸ்ஜித்துன் நூர்) அல் பலாஹ் கல்வி நிலையத்தில் நடைபெற்றது.

இப்பட்டமளிப்பு விழாவில் சேஹ் அபூ யூசுப் றியாத்துல் ஹக், சேஹ் யூசுப் சாபிர், சேஹ் றிட்வான் மொஹமட் உள்ளிட்டவர்கள் அதீதிகளாக கலந்துகொண்டதுடன், இலங்கையைச் சேர்ந்த இங்கிலாந்தில் வசிக்கும் பெருமளவு சகோதரர்களும் பங்கேற்றனர்.

ஆங்கிலம், பிரன்ஞ், தமிழ், அரபு மொழிகளில் நன்கு பரீட்சயமுள்ள ஹாபிஸ் முஆத் ஹானுக், ஐரோப்பிய நாடுகளில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களிடமிருந்து உருவாகியுள்ள முதலாவது ஹாபிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.