மங்கள சுமத்திய குற்றச்சாட்டு, ஆளும்கட்சி இரண்டானது - ரணில் + நிமல் தலைமையில் கூட்டம்
ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்க் குழுக் கூட்டம் இரண்டாக நடைபெறவுள்ளது.
வெளிவிவகார அமைச்சரின் கருத்தைத் தொடர்ந்து ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கூட்டம் இரண்டாக நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னதாக ஆளும் கட்சியின் பாராளும்னற உறுப்பினர் கூட்டம் ஒன்றாக நடைபெற்று வந்தது.
எனினும், இன்றைய தினம் 11.30 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டம் தனித்தனியாகவே நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கவுள்ளார்.
ஸ்ரீலஙக்h சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்திற்கு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமை தாங்கவுள்ளார்.
அண்மையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்திய காரணத்தினால், இவ்வாறு தனித்தனியாக கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment