உலகம் முழுவதும் பௌத்தத்தை பரப்பும், மத்திய நிலையமாக இலங்கை மாற்றப்படும் - மைத்திரி
பிக்குமாருக்கு பௌத்த கல்வி கிடைப்பதற்காக வசதிகளை மேலும் விரிவுப்படுத்தி, பௌத்த சமயத்தை உலகம் முழுவதும் பரப்பும் மத்திய நிலையமாக இலங்கை மாற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்தின் 3 மாடிகளை கொண்ட புதிய நூலகத்தை இன்று -22- பிற்பகல் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
நாட்டை ஆன்மீக ரீதியாக பௌதீக ரீதியாக அபிவிருத்தி செய்யும் போது, படித்த, தேர்ந்த பிக்குகளின் ஆலோசனைகள் அரசாங்கத்திற்கு தேவை.
நாடு முழுவதும் உள்ள சகல விகாரைகளிலும் குறைப்பாடுகளை கண்டுபிடித்து அவற்றை நிர்த்திக்க புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
கிராமத்து விகாரையின் பிக்குமாரை மாத்திரமல்லாது ஏனைய மதத் தலைவர்களையும் வலுப்படுத்தி சிறந்த சமூகத்தை நாட்டுக்குள் உருவாக்குவது அரசாங்கத்தின் வேலைத்திட்டமாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Puriyizu Sir , puriyizu . Neengal Vilaivasigalai uyarthumpozu
ReplyDeletePansalgalil BANA solvazatku , vishayam therintha BIKKUGAL
thevai ! Izuthaney ?