பலஸ்தீன இளைஞரை உயிருடன் எரித்த, குற்றத்திற்காக இஸ்ரேலியர்களுக்கு தண்டனை
பாலஸ்தீன இளைஞர் ஒருவரை உயிருடன் எரித்த குற்றத்திற்காக இஸ்ரேலியர்கள் இருவரில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் மற்றொருவருக்கு இருபது ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மொஹமத் அபு காதர் என்ற இந்த இளைஞர் 2014ஆம் ஆண்டு ஜெருசலேமிலுள்ள ஒரு வீதியில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இவரைக் கொலை செய்தவர்களும் பதின்ம வயதையுடையவர்களாக இருந்தமையினால் அவர்களது பெயரை காவல்துறையினர் அப்போது வெளியிடவில்லை.

யூதக் குடியேறியான யூசுப் ஹைம் பென் டேவிட் என்பவர் இந்தத் தாக்குதலை வழிநடத்தியுள்ளார் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ஆனால் அவர் மனநலத்துடன் இருக்கிறாரா என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை என நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
யூசுப் மனநலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளமையினால் அவர் இந்தத் தாக்குதலை வழிநடத்தியிருக்க முடியாது என அவருக்காக வாதிட்டுவரும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

Post a Comment