Header Ads



உடலுறவின் மூலம் தொற்றுநோயாக மாறிய ஸிகா


டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான கொசுக்களின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஸிக்கா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட 24 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் படுவேகமாக பரவி வருகின்றது.  

தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது. இதனால், ஸிக்கா பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன. இந்நோயானது, சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் ‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவுவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், செக்ஸ் மூலமாகவும் ஸிக்கா பரவுவதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நோயை குணப்படுத்தும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஏற்கனவே பிரேசில் நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஸிக்கா நோய் பாதிப்புடன் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியா கண்டத்துக்கும் வேகமாக பரவ தொடங்கியுள்ள ஸிக்கா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனமான "WHO" கவலை தெரிவித்துள்ளது. ஸிக்கா வைரஸ் கிருமிகள் மிக வீரியத்துடன் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான மார்கரெட் சான் குறிப்பிட்டுள்ளார். 

சுமார் 40 லட்சம் மக்களை இந்நோய் தாக்கக்கூடும் என மதிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய்த்துறை இயக்குனரான டாக்டர் மார்கோஸ் எஸ்பினல், கொசுக்கள் எங்கெல்லாம் உள்ளனவோ.., அங்கெல்லாம் ஸிக்கா நோய் செல்லக்கூடும். அது பரவும்வரை நாம் காத்திருக்க கூடாது என எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க நாடுகளை கடந்து ஐரோப்பிய நாடுகளிலும் ஸிகா நோய் வேகமாக பரவி வருகின்றது. அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான டெக்ஸாஸ் மாநிலத்திலும் பலருக்கு இந்நோயின் அறிகுறிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஸிகாவால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியுடன் உடலுறவு வைத்துகொண்டதன் மூலம் தற்போது இங்குள்ள ஒரு ஆணுக்கும் ஸிகா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

1 comment:

  1. Islam Guide Us To FAMILY, which is protect us from this kind infection.

    Alhamdulillah..The Creator of Human Know what is GOOD and BAD for us.

    ReplyDelete

Powered by Blogger.