Header Ads



அமைச்சின் நிதியில், அமைச்சின் மனைவி நடாத்தும் மசாஜ் பார்லர்

-GTN-

அமைச்சின் நிதியைக் கொண்டு மசாஜ் பார்லர் அமைத்ததாக அமைச்சர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமைச்சரின் மனைவியினால் இந்த பார்லர் நிர்வாகம் செய்யப்பட்டு வருவதாகவும், உடற்பயிற்சியை ஊக்குவித்தல் என்ற அடி;பபடையில் இந்த பார்லர் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பார்லரில் பணியாற்றி வரும் பெண்களுக்கு பெருந்தொகை சம்பளம் வழங்கப்படுவதாகவும் அமைச்சின் நிதி ஊடாக சம்பளம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சு ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ள துறைகளைத் தவிர்ந்த ஏனைய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதனை அரசாங்கம் தடை செய்யத் தீர்மானித்துள்ளது.

இந்த பார்லர் தொடர்பில் அமைச்சரவையில் ஏற்கனவே குற்றம் சுமத்ப்பட்டுள்ள நிலையில், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் எதிhப்பு வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. அமைச்சரின் பெயரை சொல்லுங்க சார்! இப்படி அந்த அமைச்சர், இந்த அமைச்சர் என்று மொட்டையா நியுஸ் எழுதாமல்!

    ReplyDelete
  2. தங்கள் சொந்த செலவில் அந்நிய ஒருவனின் தசைபிடித்து விடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.