ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்த முயற்சி - பொதுபலசேனா ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் மகஜர்
அரசாங்கம் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் உறுப்புரிமையை பெற்றுக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இதன் மூலம் நாட்டில் ஷரீஆ சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதை எதிர்த்தும் பொதுபலசேனா அமைப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜரொன்றினைக் கையளித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகேயினால் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கையில் சமய ரீதியிலான வங்கி முறையொன்றினை அரசு அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிகிறோம். இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.
இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு இதுவரை ஆட்சி செய்த ஐ.தே.க. மற்றும் ஸ்ரீல.சு. கட்சி பொறுப்புக் கூற வேண்டும் என்பதுடன் நாட்டை தேவையற்ற பிரச்சினைகளுக்கும் ஆளாக்கியுள்ளன.
மத்திய வங்கியின் ஆளுநர் நாட்டில் இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையிலான சமய ரீதியிலான வங்கி முறை ஆரம்பிக்கப்படமாட்டாது என ஏற்கனவே எமக்கு எழுத்து மூலமான உறுதி வழங்கியுள்ளார். இந்நிலையில் இலங்கையில் இஸ்லாமிய வங்கிமுறையை நிறுவ முயற்சிப்பதானது மிகவும் கவலைக்குரியதாகும்.
ஆட்சியாளர்களின் திறமையற்ற ஆட்சியினால் முஸ்லிம் அல்லாத நாடொன்றில் இவ்வாறான இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்த இரகசியமாக முயற்சிக்கப்படுகிறது. மக்களின் பணம் தொடர்பில் பொறுப்பு கூறவேண்டிய பாராளுமன்றமும் இது தொடர்பில் மௌனமாக இருப்பது மிகவும் ஆபத்தானதாகும் என்பதை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Adade..Meendum vedhaalam murungai maram earuhirathe...!!!
ReplyDeleteஷரிஆ சட்டடத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று கூக்குரல் போடும் bbs இந்த சட்டத்தில் என்ன குறைகளை கண்டார்கள் இதன் மூலம் ஏழைகளின் பணம் மறைமுகமாக சுரண்டப்படுவது நிறுத்தப்படும்,தெளிவான ஒளிவு மறைவு இல்லாமல் திறந்த வெளியான பொருளாதாரக்கொள்கை பரப்பப்படும் கடனை வாங்கியவர்கள் திரும்ப செலுத்துவதற்கு இலகுவான வழிமுறைகள் ஏற்ப்படும் அதனால் அரசாங்க பணத்துக்கு கோடிக்கணக்கான பண மோசடி ஏற்ப்படாது கடனை பல கோடிகளை வங்கிகளில் கடன் வாங்கிய பண முதலைகள் சாட்டுப்போக்குச்சொல்லி கடனை கட்டாமல் மோசடி செய்யும் நிலைமை குறைவடையும்.வட்டி கட்ட முடியாமல் முதலையும் கட்டாமல் பொதுப்பணத்தை திரும்பச்செளுத்தாமல் ஏமாற்றும் இவர்களுக்கு நீதிமன்றங்களால் தள்ளிபடி செய்யும் பணம் பொதுமக்கள் மூலம் வரியாகவும் பொருட்களின் விலை ஏற்றத்தாலும் அரசாங்கம் ஈடு செய்கிறது.
ReplyDeleteKakaththukku kanavilum .....kindira ennam parungo.
ReplyDelete