Header Ads



யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களை, வழமைபோன்று வரும்படி துணைவேந்தர் அழைப்பு (வீடியோ)

-பாறுக் ஷிஹான்-

யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியினால்  வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தினால் பல்கலைக்கழக  முஸ்லீம் மாணவர்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்பில்லை என  துணைவேந்தர் பேராசிரியர்  வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான்  பதியுதீன்  தொலைபேசி ஊடாக துணைவேந்தரிடம் இவ்விடயம் தொடர்பாக  விடுத்த வேண்டுகோளின்படி துணைவேந்தர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். எனவே எவ்வித அச்சமுமின்றி வழமைபோன்று முஸ்லீம் மாணவர்கள் விரிவுரைக்கு சமூகம் அழிக்குமாறு கேட்டுள்ளார்.

இதேவேளை கருத்து தெரிவித்த துணைவேந்தர்,

பல்கலைக்கழகத்தில் உள்ள பீடங்களில் உள்ள துறைத்தலைவர்களுடனான சந்திப்பினை அடுத்து மேற்படி சுற்று நிருபத்தை  தவறாக கலைப்பீடாதிபதி வெளியீட்டுள்ளார்.

இச்சுற்று நிருபத்தில்  மாணவர்களுக்கு ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆனால் சேலை சாரி தொடர்பாக எவ்வித முடிவும் அதில் எட்டப்படவில்லை. இதனை கலைப்பீடாதிபதியே தவறாக அணுகி இவ்வாறாக  சுற்றுநிருபம் ஒன்றினை வெளியிட்டதாக குற்றம் சாட்டி உள்ளார்.

ஆனால் கலைப்பிடாதிபதியின் கையொப்பத்துடன் உள்ள துண்டு பிரசுரத்தில் மாணவர்கள் மற்றும் கல்வி சார் உத்தியோகஸ்தர்கள் டெனிம் மற்றும் ரி-சேர்ட் என்பவற்றை விரிவுரை நடைபெறும் நேரத்தில் அணிந்து இருப்பதை தவிர்த்தல். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பெண்கள் சேலை அணிந்து விரிவுரைகளில் பங்கேற்க வேண்டும். தாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது. ஆகிய கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

இவை யாழ்.பல்கலைகழக பேரவையின் அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து மாணவர்களினதும் உடை ஒழுங்குகள் பற்றி கடந்த 16ம்  திகதி துறை தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் ஆராயப்பட்டு குறித்த ஒழுங்கு விதிகள் கட்டுப்பாடுகள் விதிப்பதென தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை கேள்விப்பட்ட  முஸ்லீம் மாணவர்கள் அதிர்ச்சியடைந்து விரிவுரையை பகிஸ்கரிக்க எண்ணி இருந்தனர். ஆனால் தற்போது வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதினின் தலையீட்டினால் இச்சுற்று நிருபம் முஸ்லீம் மாணவர்களிற்கு இல்லை என துணைவேந்தர் மறுத்துள்ளார்.

அத்துடன் சிங்கள மாணவர்களுக்காகவே இவ்வாறான சுற்றுநிருபம் பொருந்தம் என மாகாண சபை உறுப்பினரிடம்   மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  இப்பல்கலைக்கழகத்தில் முஸ்லீம் சிங்கள மாணவர்கள் கல்வியினை தொடர்கின்றனர்.இவர்களில்  சுமார் 500க்கு அதிகமான முஸ்லீம் மாணவ மாணவியர்கள் உள்ளனர்.இவர்களில் பலர் கலைப்பீடத்தில் பல்வேறு துறைகளில்  உள்ளனர். முஸ்லீம் மாணவர்களிற்கு என முஸ்லீம் மஜ்லீஸ் என்கின்ற அமைப்பு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


3 comments:

  1. இது வேண்டுமென்றே முஸ்லிம்களை சீண்டிப் பார்க்கும் செயல்..
    முஸ்லிம்களுக்கெதிரான சிங்கள இனவாதம் சற்று அடக்கி வாசிக்கப் பட்டிருக்கும் போது...தமிழ் இனவாத பூதம் தருணம் பார்த்து கிளம்பிவிட்டதா?
    ஏட்கனவே ஒவ்வொரு பருவத்திலும் ஏதோவொரு வடிவில் முஸ்லிம்களை சீண்டிக்கொண்டேஇருக்கிறார்கள்.
    வவுனியாவில் பரீட்சைப் பேப்பரில் நபியவர்களை நரிஎன்றும்
    நபியவர்களின் தாய் என்பதை நாய் என்றும் வேண்டுமென்றே பதிவேற்றி பின்னர் தட்டச்சு பிழைஎன்றார்கள்.
    ஜானசாரனும் ஏதாவது குற்றச் சாட்டை முன்வைத்து....முஸ்லிம்கள் கிளர்ந்தெளுகின்றபோது....நாங்கள் சாதாரண முஸ்லிம்களின் நண்பர்கள் என்பதும்... வாஹ்ஹாபிகளுக்கெதிராகவே நாங்கள் பேசுகிறோம் என்று பெல்டியடிப்பதெல்லாம் இனவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் கைவந்த கலையே....என்றாலும் முஸ்லிம்கலுக்கெதிரான உள்வீட்டுப் பயங்கரவாதிகளின் கதி என்ன ஆனது என்பதை ஒரு கணம் புரட்டிப் பார்ப்பார்களா?
    வீடியோவில் அம்மணி டீசன்டான உடையென்று எதைசொல்லவருகிறார்?குட்டைப் பாவாடையையும் டீஷர்ட்டையுமா?
    இப்போதெல்லாம் நாம் வாடமாகானங்களில் அடிக்கடி செவியுறும் கட்பளிப்புக்களும் கொடூரக் கொலைகளுக்கும் என்ன காரணம் என்றறியாத ஒரு இனவாத முகாமைத்துவம் தேவைதானா?
    இவர்களால் தங்கள் மாகாணங்களில் இவ்வாரான சமூக சீரழிவுகளில் இருந்து அப்பாவிப் பெண்களைப் பாதுகாக்க ஏதாவாது பங்களிப்பு செய்ய முடிந்த முகாமைத்துவமா என்பதை அரசாங்கம் தேடிப் பார்க்க வேண்டும்....

    ReplyDelete
  2. They are talking about KG disciplines. What about the disciplines under the trees, stones and umbrellas? Instead of talking about beard, try to establish a maternity hospital and an office for marriage registrar. This makes sence specially for art faculty instead of talking about dressing codes for adults.

    ReplyDelete
  3. Jaffna University is a well known one. Any sensitive desciplinary issues must be discussed well and agreed by the senate. I hope this kind of silly mistakes will not happen again.

    ReplyDelete

Powered by Blogger.