முஸ்லிம் கூட்டமைப்புக்கு, ஜம்மியத்துல் உலமா பிரார்த்தனையுடன் கலந்த ஆதரவு
(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)
உத்தேச முஸ்லிம் கூட்டமைப்பு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பூரண ஆதரவளிக்குமெனவும், அதன் வெற்றிக்காக பிரார்த்திப்பதாகவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி முபாரக் குறிப்பிட்டதாவது,
ஊடகவியலாளர்கள் சிலர் இணைந்து முஸ்லிம் அரசியல் தலைமைகளையும், முஸ்லிம் அரசியல்வாதிகளையும் ஒன்றுசோர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இது வரவேற்புக்குரியது. இதற்கு ஜம்மியத்துல் உலமா தனது பூரண ஆதரவை வழங்கும்.
இவ்வாறான ஒரு முஸ்லிம் கூட்டமைப்பு முஸ்லிம் நலன்கள் குறித்து பேசும் அவ்வாறான பேச்சுகள் முஸ்லிம்களின் உரிமைகளை பலப்படுத்துவதாக அமையும்.
இன்று தமிழ், மலையக அசியல் தலைமைகள் ஒன்றுபட்டுள்ளன. இதனால் சர்வதேசமும், இலங்கை வரும் சர்வதேசப் பிரதிநிதிகளும் அந்த சமூகங்கள் குறித்து பேச ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையில் அரசியலமைப்பு மாற்றம், தேர்தல் முறை மாற்றம், எல்லை நிர்ணயம் உள்ளிட்ட பல தேசிய விவகாரங்கள் குறித்து முக்கிய விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில் முஸ்லிம்களின் நலன்கள் உறுதிப்படுத்தப்ட வேண்டுமாயின் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்பும், முஸ்லிம் அரசியல்வாதிகளின் இணைவும் பிரதானமானது.
அந்தவகையில் முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்று நிறுவப்பட வேண்டுமென ஜம்மியத்துல் உலமாவும் வரவேற்கிறது. அதற்கு பூரண ஒத்துழைப்பு நல்குமெனவும் முபாரக் மௌலவி மேலும் கூறினார்.
ella sirkku bithathukum aadravo koddukum acju.ithu nothing miyav
ReplyDelete