பணத்தின் மீது, மஹிந்த கொண்ட ஆசை - எயார் லங்காவுடன் ஒப்பந்தம், நிராகரித்த மைத்திரிபால
நாட்டு மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் சூழலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய வெளிநாட்டு பயணத்திற்காக 4 பில்லியன் அமெரிக்க டொலரை செலவிடுவதற்காக எயார் லங்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக சமூக நலன்புரிகள் இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
எயார் லங்கா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ள போதும் குறித்த நிறுவனத்திற்கு அரசாங்கம் 1.4 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மஹிந்த மக்களின் பணத்தின் மீது ஆசை கொண்டதன் பயனாகவே தற்போது சிறைச்சாலை மற்றும் நீதிமன்ற வளாகங்கள் மீது காலடி எடுத்து வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று -25- நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
(எம்.எம்.மின்ஹாஜ்)

Post a Comment