Header Ads



ராஜித சேனாரத்ன, நாடகமாடுகிறார் - திவயின பத்திரிகை

பொலிஸ் நிதிமோசடிப் பிரிவின் விசாரணையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சியாகவே அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகவீன நாடகமாடுவதாக திவயின பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

தற்போது அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகவீனமுற்று சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு இருதய சத்திரசிகிச்சை ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் திவயின பத்திரிகை தனது செய்திக் குறிப்பில்,

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளை திசைதிருப்பும் நோக்கில் அவர் சுகவீனமுற்றுள்ளது போன்று நாடகமொன்றை முன்னெடுத்திருக்கின்றார் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகாவும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே இந்தக் குற்றச்சாட்டு தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சர் ராஜித சேனாரத்ன நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் அளித்த பங்களிப்பு மற்றும் சிறுபான்மை மக்கள் மீது கொண்ட நேசம் காரணமாக அவர் விரைவில் குணமடைய வேண்டி நாட்டின் நாலாபக்கங்களிலும் பிரார்த்தனை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன என கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயிலிலும் கடந்த வாரம் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்காக விசேட பூஜைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அநுராதபுரம், சம்மாந்துறை, கொழும்பு ஆகிய இடங்களில் இன்று முஸ்லிம் இளைஞர்கள் சார்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன சீக்கிரம் குணமடையவேண்டி விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

2 comments:

  1. Include give him Hidaya in Islam too in your dua brothers

    ReplyDelete
  2. நல்லாட்சியில் சட்டம் அனைவருக்கும் சமமாகவே செயற்படும் என்றே நம்புவோம்.

    ஆனால் ஒன்று, பொதுவாக கைதுசெய்யப்பட்ட பின்புதானே சுகயீனம் ஏற்படும். முன் பிணை வாங்குவதுபோல முன் சகயீனமும் ஏற்படுகின்றதோ..?

    ReplyDelete

Powered by Blogger.