Header Ads



உலக பொருளாதார நெருக்கடிக்கான, மாற்றுத்தீர்வு இஸ்லாமிய பொருளாதாரம்

AH. றிபாஸ் BA (Hons)

பொருளியல் என்பது மனிதனின் உள்ளத்தில் தோன்றும் தேவைகளையும் அவற்றை நிறைவேற்ற பயன்படுத்தப்படும் இறைவனின் அருட்கொடைகளையும் அவற்றுக்கிடையிலான தொடர்புகளையும் விளக்கும் அறிவியலாகும் (முஆஆ.பளீல் ஹக்2009).

இன்றை நவீன உலகம் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தற்போது உலகில் நடைமுறையிலுள்ள பொருளாதார முறைகளும், அமைப்புக்களும் முகம் கொடுக்க முடியாத ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இன்று உலகம் எதிர் கொண்டுள்ள பொதுவான வேலையின்மை பிரச்சினை, வறுமை, பணவீக்கம், நாட்டில் உள்ள மக்களின் தலா வருமானம் குறைவு போன்ற பல்வேறான பிரச்சினைகள் இன்று ஒரு சில எண்ணக் கூடிய நாடுகளைத் தவிர மற்றைய எல்லா நாடுகளிலும் தலை விரித்தாடும் பாரிய நெருக்கடிகளாக காணப்படுவதனை அவதானிக்க கூடியதாக காணப்படுகின்றது.

முதலாளித்துவ பொருளாதாரம் என்றும், சம தர்மப் பொருளாதாரமென்றும், கலப்புப் பொருளாதாரம் என்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு பொருளாதார முறையும் சில சில பகுதிகளுக்கும் சில சில நபர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக காணப்படும் அதே வேளை எல்லா பிரதேசங்களுக்கும் நாடுகளுக்கும், மக்களுக்கும் பொருந்தக்கூடியதாக அதனை அவதானிக்க முடியாமலேயே இக்கால கட்டத்தில் பொருளாதார நெருக்கடி தோன்றுவதற்கு காரணங்கள் என்றாலும் தவறில்லை.

கைத்தொழில் புரட்சி, தலையிடாக் கொள்கை, தாராள வர்த்தக கொள்கைகள் காலப்போக்கில் முதலாளித்துவத்தை தோற்றுவித்தன. முதலாளித்துவப் பொருளாதாரம் வசதி படைத்த பணக்காரனான ஒருவன் மேலும் வசதி வாய்ப்புக்களை பெற்று அவனது தேவைகளை பூர்த்தி செய்து உயர்ந்து செல்லும் அதே வேளை அடிமட்டத்திலுள்ள ஒருவன் அடிமைத்தனமாக உழைத்து மற்றவர்களை வாழவைக்கும் நிலையில் அவன் அப்படியே வசதிகளற்றவனாகவே காணப்படுகின்றான். முதலாளித்துவப் பொருளாதாரம் உள்ளடக்கியிருக்கும் சுரண்டல்,  தனியுரிமை, ஏமாற்றல் போன்றன காரணமாக சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுவதுடன் செல்வந்தன் - ஏழை, கடன்காரன் - கடன்கொடுத்தோன் , முதலாளி – தொழிலாளி போன்ற வர்க்க வேறுபாடுகளை ஏற்படுத்துவதன் விளைவாக மனக்கசப்பு, குரோதம், பொறாமை போன்றன ஏற்பட்டு சமூக சீர்கேடுகளுக்கு வழிகோலுகின்றன.

உலகில் அதிகமான நாடுகள் இக் கொள்கையினை பின்பற்றி வருகின்றன. குறிப்பாக மேற்கு ஜரோப்பா நாடுகளும் அவற்றை சார்ந்த நாடுகளும் குறிப்பிடத்தக்கவைகள். பிரித்தானிய, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் காலணித்துவ ஆதிக்கப் போட்டியில் வெற்றி பெற்று ஏகாதிபத்தியங்களை உருவாக்கின.

அரச தலையீடு, வழிகாட்டல் மூலமாக இயங்கும் சமதர்மப் பொருளாதாரத்தில்; (ளுழஉயைடளைவiஉ நுஉழழெஅல) ஒரு மனிதனின் தக்க உழைப்புக்கேற்ற விதத்தில் அவன் அதனை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலை காணப்படும் அதே நிலையில் மற்றவர்களுக்கும் அவன் உழைப்பு சென்றடைவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத தொன்றாகும். இம்முறை இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரை செல்வாக்குப் பெற்றிருந்தாலும் சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட அரசியல் கொள்கை மாற்றத்தை தொடர்ந்து உலகில் சம தர்ம பொருளாதாரத்தின் சிந்தனைகள் சரிவை சந்திக்க தொடங்கின. சமதர்மப் பொருளாதார முறையில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இப்பொருளாதாரம் செயற்படுவதனால் தனி நபருடைய சுதந்திரம் பறிக்கப்பட்டு, அவரின் சொத்து, உழைப்பு அனைவருக்கும் பங்கிடப்படுகிறது.

அதே போன்றுதான் கலப்புப் பொருளாதாரம் என்பது முதலாளித்துவ பொருளாதாரம் சமதர்மப் பொருளாதாரம் இரண்டும் சேர்ந்த ஒரு பொருளாதார முறைமையாகும். இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான், சிலி மற்றும் ஆர்ஜென்டீனா போன்ற நாடுகளில் இக்கலப்பு பொருளாதாரம் காணப்படுகின்றன.

இவ்வகையான பொருளாதாரங்களில் தனியார் சொத்துடமை, தலையிடாக் கொள்கை, சுரண்டல், நுகர்வோன் இறைமை, விலைப் பொறிமுறை, சமத்துமற்ற வருமான பங்கீடு, வள வீண்விரயம், தலையிடாக் கொள்கை, பதுக்கலும் மோசடியும், வர்க்க வேறுபாடு, மூலதனத் திரட்சி போன்ற பாரிய குறைபாடுகளை இவற்றில் அடையாளம் காட்ட முடியும்.
இவ்வாறான குறைபாடுகளை இ;ப்பொருளாதார முறைமைகள் கொண்டிருப்பதன் காரணமாக உலகில் ஏற்படும்; பொருளாதார நெருக்கடியை எந்த ஒரு பொருளாதாரத்தாலும் சமாளிக்க கூட முடியாத நிலமை காணப்படுகின்றது. இதனால் தான் தலைவிரித்தாடுகின்ற நாடுகளின் பிரதிநிதிகளும் கூட இன்று புதியதொரு பொருளாதார முறையின் அவசியத்தை ஏற்றுக் கொள்கின்றனர். பிரேசில் தலைவர் டுரணை ஐடியஉயை டுரடயனய ளுடைஎய புதிய பொருளாதார முறைமைக்கு அறைகூவல் விடுத்தார். இஸ்லாமிய அறிஞர் ஆழாயஅஅயன வுயஙi ருளஅயiniஇ னுச ர்ரளயin ளுயாயனயவா போன்றவர்கள் எல்லாம் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்களுக்கு இஸ்லாமிய பொருளாதார முறைமையைத் தவிர எந்த ஒரு பொருளாதாரத்தினாலும் தீர்வினைப் பெற முடியாது என்று கூறுகின்றனர்.

'பொருளியல் அறிஞரான  அடம்ஸ்மித் கூறுகின்ற போது இவ்வுலகில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியவேண்டுமாக இருந்தால் வட்டி என்பது ஒழியவேண்டும் என்றும்; மேலும்  வட்டியில்லை என்றால் தான் உண்மையான அபிவிருத்தியும் ஆக்கத்திறனையும் அடையமுடியும்' என்றார்.
ஆனால் இஸ்லாமிய பொருளாதாரம் முதலாளித்துவம், சமதர்மம், கலப்பு பொருளாதாரம் இவையனைத்தையும் விட வித்தியாசமான கண்ணோட்டத்தில் செயற்படுகின்றது. இஸ்லாமிய பொருளாதாரம் தனிப்பட்ட நபர்களுக்கோ அல்லது ஒரு துறை வர்க்கத்தினருக்கோ அது நன்மை பயப்பதை நோக்கமாகக் கொண்டதல்ல. இஸ்லாம் என்பது இறைவனிடமிருந்து வந்த ஒரு முழுமையான வாழ்கை நெறியாகும். அந்தடிப்படையில் கொடுக்கல், வாங்கல், பொருளாதாரம் அனைத்தையும் இறைவனின் கட்டளைப் பிரகாரம் மனிதன் செய்யும் போது எல்லா சமூகத்தினரையும், பாதுகாப்பதோடு சமூகத்தில் காணப்படும் வறுமை,பஞ்சம், நிதி நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம், வர்க்க வேறுபாடுகள், ஏழை பணக்காரன் என்ற வேறுபாடுகள் எதுவுமே இல்லாமல் சமூகநீதி நிலை நாட்டப்படுகின்றது.

பொருளாதாரத்தைப் பற்றி இஸ்லாம் பின்வருமாறு நோக்குகிறது.
'வானங்கள், பூமியிலுள்ளவை அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியனவாகும்'(அல்குர்ஆன் 10:55)
'பூமியிலுள்ள அனைத்தையும் (வளங்களையும்) அவன் உங்களுக்காகவே படைத்தான்'(அல்குர்ஆன் 2:29)

'பின்னர் (ஜூம்ஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய பேரருளைத் தேடி பெற்றுக் கொள்ளுங்கள்'(அல்குர்ஆன் 63:10)

'நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவைகளில் நல்லவற்றிலிருந்து செலவு செய்யுங்கள்'(அல்குர்அன் 2:267)

இந்த உலகத்திலுள்ள அனைத்தும் தனக்கே உரியதாகும் எனக் கூறும் அல்லாஹ் அவ்வனைத்துப் பொருட்களையும், வளங்களையும் மக்களின் தேவைகளுக்காகவே படைத்திருப்பதாக கூறுகின்றான். மேலும் மனிதர்களைப் பார்;த்து பூமியில் சென்று தேவைகளைத் தேடிப் பெற்றுக் கொள்ளும் படி  கூறுகின்றான். அவ்வாறு பெற்றுக்கொண்ட சம்பாதித்தவற்றில் ஏழை ஏழியவர்களுக்கும் ஸகாத், ஸதகா நன்கொடையாக செலவு செய்யுமாறு கட்டளை இடுகின்றான். இங்கு முதலாளித்துவத்தைப்போன்று தனிநபரை சுரண்டும் படியோ அல்லது சமதர்மப் பொரளாதாரத்தில் கஷ்டப்பட்டு உழைக்கும் தனி நபரின் சுதந்திரம் மட்டுப்படுத்தப்படவோ இல்லை.

முதலாளித்துவம் சமதர்மம் கலப்புப் பொருளாதாரங்களில் மேற்படி குறைபாடுகள் காணப்படும் நிலையில் இஸ்லாமிய பொருளாதாரத்தில் பின்வரும் சிறப்பம்சங்களையும் பண்புகளையும் அடையாளப்படுத்த முடியும்.
வட்டியற்ற கொடுக்கல் வாங்கல், ஹறாம், ஹலால், சமூக நலனையும் கவனத்திற் கொள்ளல், சிறந்த வருமானப் பங்கீடு முறை, பொருளீட்டல் தொடர்பான இறை சட்ட ஏற்பாடுகள். போன்றவற்றை சுட்டிக்காட்டலாம்.

தற்காலத்தில் இஸ்லாமிய பொருளாதாரத்தின் நிதர்ஷனம் அறிந்தவர்கள் எல்லாம் இன்று வட்டியை கொண்ட பொருளாதார முறைமைகளிலிருந்து தாங்களை விடுவித்துக் கொண்டிருக்கின்றார்கள். வட்டி வங்கிகளில் காணப்படும் தங்களின் வைப்புக்கள், முதலீடுகள் அனைத்தையும் மக்கள் மீளப்பெற்று இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் சொல்லும் வட்டியில்லாத வங்கிகளில் தங்களது வைப்புக்களையும், முதலீPடுகளையும், கொடுக்கல் வாங்கல்களையும் ஏற்படுத்துகின்றார்கள்.

வட்டி காரணமாக கடன் பட்டோன் அக்கடனுடன் குறித்த வட்டித் தொகையை கட்ட முடியாமல் வாழ்வில் எதிர் நீச்சல் அடிக்க முடியாமல் தத்தளித்து மாயந்து போய்க் கொண்டிருக்கின்றான். அவன் பெறும் கடன் தொகை அவனை பாதிப்பதுடன் அவனைச் சூழவுள்ள அவனின் பரம்பரையினையும் பாதிப்பது என்பது சமூகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

இப்படியான மிகக் கொடிய வட்டியிலிருந்து மீள வேண்டும் என்பதற்காக அதிகமானோர் இன்று இஸ்லாமிய வங்கிகளை நோக்கி படை எடுத்துள்ளதனை காணமுடியும். இன்று இலங்கையில் காணப்படும்  25 வர்த்தக வங்கிகளில் அதிகமானவை, ஐளடயஅiஉ றுiனெழற என்ற பகுதியினையும் ஆரம்பித்துள்ளதனை பார்க்க கூடியதாக உள்ளது. மக்கள் வங்கி, இலங்கை வங்கி, ஹட்டன் நெசனல் வங்கி;, கொமர்சல் வங்கி, டுழுடுஊஇ.... போன்ற நிதி நிறுவனங்கள் இஸ்லாமிய பகுதியினை உருவாக்கியதனை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். எதிர்காலத்தில் இஸ்லாமிய மயப்படுத்திய வங்கி முறைமைகளை பூரணமாக நடைமுறைப்படுத்தும் சாத்தியப்பாடுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

இலங்கையில் மாத்திரமன்றி, உலகில் ஆசியா நாடுகள் மற்றும் ஜரோப்பா நாடுகளிலும் இன்று இஸ்லாமிய வங்கி முறையின் ஊடுருவலும், அதன் தாக்கமும் அதிகமாய் காணப்படுகின்றது. மலேசியா, பிரித்தானியா போன்ற நாடுகள் இஸ்லாமிய வங்கி முறையில் மத்தியாக செயற்பட அதிக முனைப்போடு செயற்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

எனவே, இவ்வுலகில் ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடிகளுக்கு மனிதனால் உருவாக்கப்ட்ட பொருளாதார முறைகளான முதலாளித்துவமோ அல்லது சமதர்மமோ அல்லது கலப்புப் பொருளாதார முறைமையோ தீர்வாக அமையாது. மாறாக ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் பன்மடங்குகளுக்கு  சிறப்பாக முன்னேற்றுவதற்கான மிகச் சிறந்த மாற்றீடு இஸ்லாமிய பொருளாதாரம் என்பதில் எந்தவித ஐயமுமில்லை

மேலும், இவ்வுலகில் ஏற்படும் வேலைவாய்ப்பற்ற தன்மை, வறுமை, பட்டினி போன்றவற்றுக்க முற்றுப்புள்ளி வைப்பதுடன் சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், வர்க்க வேறுபாடுகள் மூலமாக தோன்றும் கசப்புணர்வு, காழ்ப்புணர்வு, கோபம், பெருமை போன்றன களையப்பட்டு இவ்வுலகம் ஒரு சிறந்த நிம்மதியான உலகமாக மிளிர இஸ்லாமிய பொருளாதாரம் உலகெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டால் அது பொருளார உலகம் மிகப் பெரிய வெற்றியாகும்.

No comments

Powered by Blogger.