Header Ads



எனது மகன் நாமல், அடுத்த வாரமளவில் கைதாகலாம் - மஹிந்த

நிதிக்குற்றப்புலனாய்வு விசாரணைப்பட்டியலில் தனது குடும்ப உறுப்பினர்களே முன்னணியிலுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் தனது மகன் நாமல் ராஜபக்ச அடுத்த வாரமளவில் கைது செய்யப்படலாம் எனவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு கொச்சிக்கடை - ரன்வெல் விடுதியில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனது குடும்பத்தையும் ஆதரவாளர்களையும் பழிவாங்கவே நிதிக்குற்றப்புலானாய்வை அலரிமாளிகையில் இயக்கி வருகின்றனர் எனவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யானையின் வாலில் தொங்கிக்கொண்டு சொர்க்கம் செல்ல முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் மக்கள் அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதேவேளை நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவு அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் இந்த நடைமுறையானது உலகில் எந்தவொரு நாட்டிலும் நடைமுறையில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

புலனாய்வு பிரிவிற்கான பொலிஸ் மா அதிபராக ஜே.வி.பி யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. The who eat salt must dring water

    ReplyDelete
  2. Dear Khalid Sharif,
    Your comments may or may not be good but please remove your profile picture because everybody knows that you are a Muslims and if anybody hurt by your comments the reaction may be on the profile picture which belongs to each and every Muslim

    ReplyDelete
  3. தனது மகன் கைதாவது முன்கூட்டியே அப்பனுக்கு தெரியும்போது அவர் செய்த ஊழல்களும் முன்பு தெரிந்திருக்குமே..தங்களுக்கு அதிகாரமில்லை இதற்கு பரிகாரம்தேட..அதுகைநலுவியதால்தான் இந்த ஆதங்கம்

    ReplyDelete
  4. Don't you know that the arms of the law is long ? Actions are
    now for the country, not for a family.You chose yourself better
    times and worse times !

    ReplyDelete
  5. இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றலாம் இந்த நாட்டிலே...?

    ReplyDelete

Powered by Blogger.