இலங்கை அணியை, எளிதாக எடைபோடக்கூடாது - டிராவிட்
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண போட்டியில் இலங்கை அணியை எளிதாக எடைபோடக்கூடாது என்று டிராவிட் அறிவுரை வழங்கியுள்ளார்.
வங்கதேசத்தில் காலிறுதிக்கான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டி நடைபெற்று வருகிறது.
இதன் அரையிறுதி ஆட்டங்கள் நாளை நடக்கவிருக்கின்ற நிலையில், ஒரு போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதவிருக்கின்றன.
இந்நிலையில், இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் டிராவிட், தனது அணியினருக்கு வழங்கிய அறிவுரையில், இலங்கை அணி இரண்டிற்கும் மேற்பட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் பல சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.
இலங்கை அணியிடம் நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும், அதுபோல் நம்மிடம் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியும்.
இந்த தொடரில் இலங்கை அணியை எளிதாக எடைபோடக்கூடாது என்றும் நாளை இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி சரியான போட்டியாக இருக்கும் எனக்கூறியுள்ளார்.
இந்திய அணி முதலில் துடுப்பெடுத்து ஆடினாலும் சரி, பந்து வீசினாலும் சரி, சிறந்த முறையில் விளையாண்டால் வெற்றி பெற முடியும் எனக்கூறியுள்ளார்
Post a Comment