Header Ads



மகிந்தவின் அதிகார வெறியினால், வீணடிக்கப்பட்ட மகன்களின் எதிர்காலம்..!!!

இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக ஜனாதிபதி ஒருவரின் மகனை சிறைக்கு இட்டுச்சென்றுள்ளதற்கு பொதுமக்கள் சாட்சியாகியுள்ளனர், அதுவும் பெரும் குற்றத்திற்காக.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன்களை சமாளித்துவிடலாம் என்பதை பொதுமக்கள் அறிந்தே வைத்துள்ளனர். ஆனால் மகிந்தவின் அரசியல் சூட்சிகள் குறித்து பொதுமக்கள் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

இருப்பினும் மகிந்தவின் இரண்டு மகன்கள் குறித்த தகவல்கள் எப்படி வெளியானது?

வெறும் அமைப்பாளராக இருந்த நாமல் மிக விரைவிலேயே ஆணை பிறப்பிக்கும் நிலைக்கு வந்தார், தமது சொல்லுக்கு கீழ்படியாத மத்திய வங்கியின் மூத்த அதிகாரிகளை மிரட்டினார். எம்.பி.களை விட தாம் உயர்ந்தவர் என நாமல் கருதிக்கொண்டதால் ஒரு மூத்த அதிகாரி தனது பதவியை ராஜினமா செய்ய நேர்ந்தது. பாராளுமன்றத்தில் நாமல் நுழைந்தால் அமைச்சர்களும் எழுந்து நின்றுள்ளனர்.

யோஷிதவால் இலங்கை கடற்படையில் இணைய முடிந்தது மட்டுமல்ல, லண்டன் மற்றும் உக்ரைனில் உள்ள பெருமைமிக்க கடற்படை பாடசாலைகளிலும் நுழைய முடிந்தது, அரசு பணம் மில்லியன் கணக்கில் அதற்கு செலவிடப்பட்டுள்ளது.

நாட்டில் மருத்துவமனைகள், பாடசாலைகள், சாலைகளுக்கு போதிய கவனம் தேவைப்படும் சூழலில் ஒருவரது பயிற்சிகளுக்காக இந்த பணம் செலவிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் இது போன்ற தகுதிகளால் நாட்டுக்கு என்ன பயன் என்று தெரியாத ஒருவர், வெளிப்படையாகவே ஆவணங்களில் மோசடி நடத்த தேர்ச்சி பெற்றது போன்றுது. 5 பேருடன் இணைந்து பண மோசடியில் ஈடுபட்டது, அதில் ஒருவர் தேசிய ஊடகத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்.

கடற்படையில் பணிபுரியும் ஒருவர் எப்படி ஒரு நிறுவனத்தின் தலைவராக முடியும், அது குடும்ப நிறுவனமாக இருந்தால் கூட? இது கடற்படை அதிகாரிகளின் வேலை.

மகிந்த ராஜபக்சவின் நகல்கள் நாமலும் யோஷிதவும். ஏனைய தந்தையர்கள் போல அல்லாமல் மகிந்த ராஜபக்ச அதிகார வெறி காரணமாக தனது மகன்களின் எதிர்காலத்தையை வீணடித்தவர். உண்மையில் நிஜமான குற்றவாளி என்பது ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரமே.

அந்த அதிகாரத்தை பயன்படுத்தி மகிந்த குற்றங்களையும், தகாத நடத்தைகளையும், ஊழலையும் ஊக்குவித்தார். அரசு நிலங்களை அபகரித்தார், பொருளாதார வீழ்ச்சிக்கு இட்டுச்சென்றார்.

மகிந்த எப்போதும் யுத்தத்தில் பெற்ற வெற்றி குறித்து பேசுவார், பொதுமக்களுக்கு அதனால் என்ன பயன் கிட்டியது. தீவிரவாதிகள் என எவரும் இல்லை, நாம் தான் சிங்கள குண்டர்களாலும் பிக்குகள் என சொல்லக்கூடியவர்களாலும் சூழப்பட்டுள்ளோமே.

இறக்கும் வரையில் இந்த நாட்டை ஆள வேண்டும் எனபதில் மகிந்த கருத்தாக இருந்தார்.

அவரது மகன்களுக்கு மேட்டுகுடி வாழ்க்கை முறை கிடைத்தது. யாரை வேண்டுமானாலும் அவர்கள் கொலை செய்யலாம், அவர்கள் நினைத்த பொழுதே மூத்த அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கலாம், நிஜத்தில் அவர்களுக்கு மேலே எவரும் இல்லை என்ற நிலை.

ஆனால், இப்போது என்ன நடந்தது என நாம் காண்கிறோம், அந்த தாயும் தந்தையும் மிக குறுகிய கண்ணோட்டத்தில் இருந்துகொண்டு சொத்துக்களையும் அதிகாரத்தையும் மட்டுமே தேடிக்கொண்டனர், நாடும் நாட்டு மக்களும் என்ன ஆனால் என்ன. நாமலும் யோஷிதவும் அவர்கள் படித்த கல்லூரிக்கே இழுக்கை தேடித்தந்தனர்.

தற்போதைய அரசு அதிகாரிகள், எம்.பி.கள் மற்றும் ஊழல் அமைச்சர்களுக்கு இது ஒரு படிப்பினை. பின் வாசல் வழியாக வந்தவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு என்பதே இல்லை, பிரதமருக்கும். உங்கள் மாமனார் ஜெ.ஆர்.ஜெயவர்தனே போன்று தந்திரசாலி என எங்கள் அனைவருக்கும் தெரியும், அதனால் பொதுமக்களை ஏமாற்ற முயல வேண்டாம்.

ஜனாதிபதியை நீக்க நீங்கள் முயன்று வருவதை நாங்கள் கவனித்தே வருகிறோம், அது மகிந்தவின் கனவு மட்டுமே. திரைமறை சூழ்ச்சிகளை கைவிட்டு விட்டு நேர்மையானவராய் மலேசிய பிரதமர் போன்று நாட்டை நேசிப்பவராகுங்கள். இவ்வாறு கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது.


4 comments:

  1. மிகவும் யதார்த்தமான விடயம் பதியப்பட்டுள்ளது. அரசியலுக்கும் உணர்வுகளுக்கும் அப்பால்பட்டு உண்மையான சிந்தனை போக்குடன் எழுதப்பட்டுள்ளது. ஒரு விடயத்தை எப்படி நோக்க வேண்டும் என்ற படிப்பினையும் முன்மாதிரிம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. Mahinda will never learn anything ! He missed the bus !He is now
    in the real company he deserves to be with, the likes of Wimal,
    Gammanpila , Dinesh , Rohitha , Johnston and other shameless lot . My3 + Ranil are going to rule for another ten years minimum. Mahinda will be eighty by then . In another ten years all power greedy oldies will be wiped out of politics ,Mahinda Djnesh, G L Peiris , all . Rajapaksas will not be allowed to
    destroy the country of all three communities .

    ReplyDelete
  3. சிறிலங்காவில் Jail க்கு போய்வந்தால் தான் politicians களுக்கு மவுசு அதிகம். அது ஒரு temperary training camp மாத்திரமே!

    ReplyDelete
  4. ஆடிய ஆட்டமென்ன.. தேடிய செல்வமென்ன...திரண்டதோர் சுற்றமென்ன....கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்னயா??????

    ReplyDelete

Powered by Blogger.