Header Ads



"சிங்கலே' க்கும், மகிந்தவுக்கும் தொடர்பில்லை" - தால்ஜின் அலுவிஹாரே

சிங்களே அமைப்பிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் தொடர்பு கிடையாது என மாத்தளை மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் தால்ஜின் அலுவிஹாரே தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களில் சிங்களே ஸ்டிக்கர்களை மஹிந்த ராஜபக்ஸவின் வழிகாட்டல்களின் அடிப்படையில் ஒட்டியுள்ளதாக வெளியாகும் வதந்திகளில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனவாதம் தூண்டும் சில அரசியல்வாதிகளினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தாம் ஓர் நேர்மையான அரசியல்வாதி எனவும், மஹிந்த ராஜபக்ஸவை தந்தைக்கு நிகராக மதிப்பதாகவும், ரணில் மைத்திரி ஆகியோருக்கு தாம் பயப்படப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவைச் சுற்றியிருந்தவர்களே அவரது தோல்விக்கு வழியமைத்தனர் என அவர்குற்றம் சுத்தியுள்ளார்.

1 comment:

  1. Mahinda's strength is chauvinism . He's still surrounded and
    supported by chauvinists. His political journey continues only
    for his safety and to see that Namal has a place in politics.
    He allows himself to be used by the radicals like Dinesh , Wimal and Gammanpila . Is he ready to let any of them take the leadership ? So, it's only a family business that he's interested in . They will not succeed . Soon they will learn this .

    ReplyDelete

Powered by Blogger.