Header Ads



தேங்காய்களைத் திருடுவது, பெரிய விடயமல்ல – ரணில்

எதிர்க்கட்சியினர் தேங்காய் உடைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குருநாகலில் கருத்துத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

தேங்காயின் விலை குறைவடைந்துள்ளது. தேங்காய் உடைப்தென்றால் ஒன்று அல்லது இரண்டு உடைக்க வேண்டாம். ஆகக்குறைந்தது நாடு பூராகவும் 10 இலட்சம் தேங்காய்களை உடையுங்கள். அதன்போது தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படும். பின்னர் தேங்காய் விலை அதிகரிக்கும். தேங்காய் விலை அதிகரித்தால் வட மேல் மாகாண மக்களுக்கு சிறந்தது. இவ்வாறு 10 அல்லது 15 தேங்காய்கள் உடைக்க வேண்டாம். அத்துடன், அரசாங்கத்தின் தோட்டங்களில் இருந்து தேங்காய்களைத் திருடவும் வேண்டாம். தேங்காய் உடையுங்கள் எமக்குப் பிரச்சினை இல்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக அவ்வாறு செய்யுங்கள். எனினும், 10 இலட்சம் தேங்காய்களை பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டும். இவ்வளவு திருடியவர்கள் தேங்காய்களைத் திருடுவது பெரிய விடயமல்ல.

No comments

Powered by Blogger.