யெமன் யுத்த களத்தில், சவூதி அரேபியாவுடன் அல்கொய்தா கூட்டு..?
(தினகரன்)
யெமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான யுத்தத்தில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையுடன் இணைந்து அந்நாட்டின் அல் கொய்தாகளும் சண்டையிட்டு வருவதாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. தாயிஸ் நகருக்கு அருகில் இருக்கும் முன்னரங்குகளில் ஜிஹாதிக்களும், அரச ஆதரவு படையினரும் ஐக்கிய அரபு ஒன்றிய படையினரும் ஒன்றாக இணைந்து யுத்தத்தில் ஈடுபட்டிருப்பதை ஆவணப்படக் குழு ஒன்று பதிவு செய்துள்ளது.
சுமார் 10 சுன்னி அரபு நாடுகளின் கூட்டணி ஒன்று யெமன் அரச படையுடன் ஷியா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. சுன்னி ஜிஹாத் குழுக்களுடன் தொடர்புகொண்டிருப்பதை இந்த கூட்டுப் படை நிராகரித்து வருகிறது. இந்த கூட்டுப்படையில் இருக்கும் உறுப்பு நாடுகள் அல் கொய்தாவை தீவிரவாத அமைப்பாக கருதுகிறது.
எனினும் ஆவணப்பட தயாரிப்பாளரான சபா அல் அஹமது என்பவர் கடந்த ஆண்டு கடைசியில் யுத்தம் இடம்பெறும் மலைப்பிரதேசம் ஒன்றுக் சென்றபோது அங்கு அரச படை மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய துருப்பினருடன் மற்றுமொரு குழுவினரும் யுத்தத்தில் பங்கேற்றிருப்பதை அவதானித்துள்ளார்.
இந்த குழுவினர் தம்மை படம்பிடிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. அவர்கள் அல் கொய்தா கிளையினர் என்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
You say us the ARAB alliance are lying But How come you trying to makes us trust the saying of SABA Al-Ahmad ? May be he is also giving you false information to misguide the world.
ReplyDeleteAllah knows best.
Every one trying to save their opinion but only few trying to establish the truth?
ஷியாக்களுக்கு எதிராக அனைத்து முஸ்லிம்களும் ஒன்றினையும் சுபசோபனத்தை இந்த செய்தி சொல்லி நிற்கின்றது, மாஷா அல்லாஹ்.
ReplyDelete