மன்னிக்க முடியாது - சந்திரிக்கா
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தரப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகினாலும் அதனால் பாதிப்பு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்தனகல்ல பிரதேசத்தில் இன்றைய தினம் -27- நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகினால் தற்காலிக அடிப்படையிலேனும் கட்சிக்கு பாதக விளைவுகள் ஏற்படப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிய தரப்பினரை மன்னிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment