Header Ads



ஆங்கில விரிவுரையாளர், அஸ்வர் மொஹிதீன் காலமானார்

ஓய்வு பெற்ற ஆங்கில விரிவுரையாளரும், ஈரான் இஸ்லாமிய குடியரசின் இலங்கைத் தூதுவராலயத்தின் தகவல் அதிகாரியுமான அஸ்வர் மொஹிதீன் (73) காலமானார். பேராதனை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் ஆங்கில விரிவுரையாளராகக் கடமையாற்றிய இவர் இலகு முறையில் ஆங்கிலப் போதனையை அறிமுகப்படுத்தி ஆயிரக்கணக்கானோருக்கு ஆங்கிலக் கல்விப் போதனையை வழங்கியுள்ளார். 

கொழும்பிலுள்ள ஈரான் தூதுவராலயத்திலும், ஹங்கேரி, ஈரான் தூதுவராலயத்தின் தகவல் அதிகாரியுமாக பணிபுரிந்த இவர் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பிராந்திய செய்தியாளராகவும் நீண்ட நாள் பணிபுரிந்துள்ளார். சிறந்த அரசியல் விமர்சகரும், ஆங்கில, தமிழ், சிங்கள மொழி பெயர்ப்பாளருமான இவர் நவமணிப் பத்திரிகையில் நீண்ட காலமாக வெளிநாட்டு விமர்சனங்களை எழுதி வந்தார். 

கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஹிம்புடானை சல்மல் உயனவில் வசித்து வந்தார். இவரது ஜனாஸா நல்லடக்கம் நேற்று மாலை மாளிகாவத்தை முஸ்லிம் மையமாவாடியில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர், மற்றும் ஈரான் தூதுவராலய உயரதிகாரிகள், ஊடகவியலாளர்கள் இவரது ஜனாஸாவில் கலந்து கொண்டனர். 

இவரது மறைவினையிட்டு பிரதேச சிங்கள மக்கள் பிரதேசத்தில் வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டு, அனுதாபப் பதாதைகளையும் தொங்கவிட்டிருந்தனர். 

இவரது மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, மர்ஹ_ம் அஸ்வர் முகைதீன் மொழி பெயர்ப்புத் துறையிலும், ஊடகத்துறையிலும் சிறப்பாக பங்களிப்புச் செய்த ஒருவராவார். 

இலகு வழிகளில் ஆங்கிலக் கல்விப் போதனையை வழங்குவதில் சிறப்பான பங்களிப்புச் செய்த இவர் தான் வாழ்ந்த பிரதேசத்தின் பெரும்பான்மை மக்களது அபிமானத்தைப் பெற்று வாழ்ந்து தேசிய ஒற்றுமைக்கு முன்மாதிரி காட்டியுள்ளார்.

அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கம் கிடைக்கப் பிரார்த்திப்போமாக.

No comments

Powered by Blogger.