Header Ads



ஆடுகளம் ஆகிப்போன சிரியா, ஆடி வெல்லப்போவது யார்..?

-முஹம்மது ராஜி -

இஸ்லாத்தில், ஷாம் என்பது சிரியா,பலஸ்தீனம் ,ஜோர்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய கடந்த கால மற்றும் எதிர்காலப்பகுதிகளில் முக்கியத்துவம் வகிக்கும் பிராந்தியம். இறுதியுத்தம் இடம்பெறும் இடமும் இதுதான் என்றும் ஈஸா (நபி )  இறங்குகிற இடமும் இதுதான் என்றும் நபிகள் நாயகம் ( ஸல் ) எதிர்வு கூறியுள்ளார்கள் .

சவுதி அரபியா ,அநேக அரபு நாடுகள் 

சவூதி அரேபியாவுக்கு என்ன நடந்தாலும் மன்னர் ஆட்சிக்கு மட்டும் ஆப்பு வந்து விடக்கூடாது .இதற்காக என்ன விலையை கொடுக்கவும் அது தயாராக உள்ளது . பர்மா முஸ்லிம்களை இன அழிப்பு செய்த போதும் , பலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய பயங்கர வாதிகளால் பலிக்கடாவாக்கப்பட்ட போதும் வாய் கட்டி மௌனம் சாதித்த சவூதி ஐ எஸ் சினால் தனது சொந்த கதவு தட்டப்பட்ட உடன் மாத்திரம் முஸ்லீம் நாடுகளை அமைத்து கூட்டணி அமைத்து உலக முஸ்லிம்கள் அனேகரை விசில் அடிக்க வைத்துள்ளது . ஐ எஸ் அழிக்கப்படா விட்டால் தம் மன்னர் ஆட்சிக்கு விரைவிலே சீல் வைக்கப்படும் என்பது சவூதியின் சிந்தனை . கொடுங்கோலன் அசாத் தனது மக்களை கொன்று குவித்த போது தரைப்படை பற்றி பேசாத சவுதி, இப்போது ஐ எஸுக்கு எதிராக கங்கணம் கட்டியுள்ளது .

ஒரு கல்லில் இரு மாங்காய்களை அடிக்கப்போய் எரிந்த கல் மீண்டும் தலையை பதம் பார்த்த கதைதான் சவூதி அரேபியாவுக்கும் அநேக அரபு  நாடுகளுக்கும். ஐ எஸ் மற்றும் அல் நுஸ்ரா தவிர போராடிவரும் அநேக போராட்ட குழுக்களுக்கு நிதி மற்றும் ஆயுத ரிதியாக நேரடி உதவி அளித்து வரும் சவுதி அரேபியாவும் அரபு நாடுகளும் அந்த அமைப்புக்கள் முலம் அசாத்தை பதவி கவிழ்ப்பதும் ஐ எஸ் சை தோற்கடிப்பதும் பிரதான  நோக்கமாக இருந்து வந்தது ; வருகின்றது .ரஷ்யா இந்த யுத்தத்தில் குதித்தது தொடக்கம் அடி மேல் அடி . தோல்வி மேல் தோல்வி . நோக்கங்கள் திசை மாறி போவதால் இப்போது தரைப்படைக்கு தயாராகிறது சவுதி அரேபியா . சவுதி என்ன செய்கிறதோ  அதையே கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும் அநேக அரபு நாடுகளும் இதில் இணையும் .

அமெரிக்கா
ஏற்கணவே ஈராக்கில் மறக்க முடியாத நிறைய பாடங்களை கற்றுக்கொண்டு, பலத்த விலையை பரிதாபமாக கட்டிய அமெரிக்கா, எது எப்படிப்போனாலும் ஐ எஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது .

அசாத் பதவியில்   இருக்க கூடாது என்று ஆரம்பத்தில் கொக்கரித்த அமெரிக்கா, இப்போது அதை அடக்கி வாசிக்கின்றது . பெரிய பேயை விட சின்ன பிசாசுடன் வாழலாம் என்ற கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளது . அசாத் இருந்தாலும் பரவாயில்லை ஐ எஸ் முற்று முழுதாக அழிக்கப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின்  குறிக்கோளாக மாறி விட்டது . கிலபா ஒன்று உருவாகும் பட்சத்தில் அது ஒரு இடத்தில் குடி கட்டிக்கொண்டு இருப்பதில்லை அது  விரிவாக்கப்படும் என்பது வரலாறுகளில் அனுபவ ரிதியாக மேற்கு நாடுகளும் புத்தகத்தில் அமெரிக்காவும்  படித்த பாடம் . அதனை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும் என்பதில் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் கருத்து முரண் படவில்லை 

அமெரிக்கா,சிரியாவில் உள்ள ypg /pyd போன்ற குர்திஷ் போராட்ட குழுக்களை இதற்காக பயன் படுத்தி வருகின்றது . இந்த குர்திஷ் குழுக்கள் , கோபாணி நகரில் இருந்து ஐ எஸ் போராளிகளை  விரட்டியதில் காட்டிய தீவிரம், ஐ எஸ் சுக்கு எதிராக வட சிரியாவில் அமெரிக்காவுக்கு நம்பத்தகுந்த பங்காளியை உருவாக்கி உள்ளது .இந்த குழுக்களுக்கு  அமெரிக்கா நேரடி ஆயுத உதவி ,நிதி உதவி ,வான் காப்பு உதவி , தொலைத் தொடர்பு உதவி ஆகியவற்றை செய்து வருகின்றது . இதே போன்று  வட ஈராக்கிலும் குர்திஷ் பிராந்திய அரசை அமெரிக்கா பயன் படுத்தி வருகின்றது .

துருக்கி
வட சிரியாவில் உள்ள இந்த குர்திஷ் அமைப்புக்களை அமெரிக்கா பயன் படுத்தி வருவது  துருக்கியை தொடர்ந்து அதிருப்தி பட வைத்து வருகின்றது . ஏற்கனவே தனது நாட்டின் தென் பகுதியில் குர்திஷ் தனி நாட்டு போராட்டத்தை எதிர் நோக்கி வரும் துருக்கி தனது அடுத்த வீட்டு எல்லையில் அதே குர்திஷ் விதைகள் விதைக்கப்பட்டு மரமாவதை ஒரு போதும் பார்த்துக்கொண்டு இருக்காது .  அமெரிககா, சிரியாவில் உள்ள ypg /pyd .போன்ற குர்திஷ் போராட்ட குழுக்களுக்கு உதவுவதை ஆரம்பததில் இருந்தே எதிர்த்து வரும் துருக்கிக்கு  , ரஷ்யாவின் தலையீடு   தொடங்கியது தொடக்கம் அங்கு போராடி வரும் அரபு /  துருக்கி சார்பான போராட்ட குழுக்கள் பின்னடைவை சந்திப்பதை அடுத்து  குர்திஷ் குழுக்கள் தமக்கு சாதகமாக அதை  பயன் படுத்தி கொண்டு  வருவது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது . 

துருக்கி, சிரியாவில் உள்ள ypg /pyd போன்ற குழுக்களை தனது நாட்டில் பிரிவினை வேண்டி போராடும் pkk அமைப்பின் கிளைகளாகவே கருதுகிறது 
துருக்கி, சிரியாவில் உள்ள ypg /pyd போன்ற குர்திஷ் போராட்ட குழுக்களுக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதை நிறுத்துமாறும் அமெரிககா கேட்டுள்ளதுடன் பொது எதிரியான ஐ எஸ் சுக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதில்   தீவிரம் காட்டுமாறு கேட்டுள்ளது . சிரியாவில் வெடித்துள்ள போராட்டங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு துருக்கி. அதிகமான சிரிய  அகதிகள் வாழ்கின்ற துருக்கிக்கு, சிரிய யுததம் தொடர்ந்தால் கடுமையாக தாம்  பாதிக்கப்படுவோம் என்பதும் தெரியும். ஏற்கனவே ரஷ்ய யுத்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதால் ரஷ்யாவுடன் இருந்த இராஜ தந்திர தொடர்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உள்ள துருக்கி ,அதன் காரணமாக பொருளாதார பாதிப்புக்களையும் சந்தித்தது .

ஈரான் 
பிரந்தியத்தில் தமது செல்வாக்கை பரப்ப முயலும் நாடுதான் ஈரான் . ஆரம்பத்தில் அநேக முஸ்லீம்களை  சகோதரத்துவம் மூலமும்,ஓற்றுமை என்ற வாதம் முலமும் ,பலஸ்தீன போராட்டத்துக்கான  ஆதரவு முலமும்  கவர்ந்து இழுத்த ஈரான் , சிரிய யுத்தம் முலம் தனது முகத்திரையை  கிழித்துக் காட்டியுள்ளது . சவுதி அரேபியா, யேமனில் நடத்தி வரும் ஷியா  ஹூத்தி  அமைப்பினருக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு பலிக்கு பலி வாங்க  சிரியவில் உள்ள சுண்ணி நகரங்களை சுற்றி வளைத்து முற்றுகை இட்டு பட்டிணியால் சாகடித்த பெருமை இந்த முல்லாக்களையே சாரும்.

ஐ எஸ் சுக்கு கோட்பாடு ரிதியாக பரம விரோதியான ஈரானை அந்த அமைப்புக்கு எதிராக பயன் படுத்தும் முகமாக நீண்ட கால எதிரியாக இருந்த ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதர தடைகளை நீக்குவதில்  அமெரிக்கா பெரும் பங்கு வகித்தது . ஈரானின் அணுச்சக்தி விவகாரமாக விதிக்கப்பட்டிருந்த அந்த தடைகள் திடீரெனெ நீக்கப்பட்டு மறுதினமே அணுச்சக்தி ஈரானின் உரிமை என்றார் அந்நாட்டின் ஆன்மீக தலைவர் . அத்தோடு நீண்ட தூர ஏவுகணை ஒன்றையும் பரிசோதித்து சந்தோசத்தை வெளிக்காட்டியது ஈரான் . ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கப்பட்டத்தில் சவூதி அரேபியாவுக்கு கடும் அதிருப்தி . கட்டப்பட்டிருந்த ஈரானின் கரத்தை அவிழ்த்து ஐ எஸ் சுக்கு எதிராக போராட வைத்ததன் பின்னணி தான் இந்த பொருளாதாரத்தடை நீக்கம் .

லெபனானிய ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் ஷீயா போராட்ட அமைப்புக்களை சேர்த்துக்கொண்டு ரஷ்ய உதவியுடன் சிரிய அரசாங்கத்துக்கு சிரியாவில் உதவி சுண்ணி அமைப்புகளுக்கு   எதிராக போராடுவதும்  ஷீயா போராட்ட அமைப்புகள் முலம் ஈராக்கில் போராடுவதும் இபபோது  முழு நேர வேலையாகி விட்டது ஈரானுக்கு ...

பரம எதிரியின் எதிரி நண்பன் ஆகி விட்டது போன்று முன்னாள் எதிரியான  ஈரான், ஐரோப்பிய நாடுகளுக்கு  இந்நாள்  நண்பனாக ஆகி விட்டது .
குறுகிய வெற்றிகளில் கூப்பாடு போட்டுக்கொண்டு இருக்கும் ஈரான், நீண்ட காலத்தில் நீண்ட யுத்தம் ஒன்றை சந்திக்கும் . அசாத்தின் ஆட்சிகளின் நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அசாத் ஆட்சியை இழக்கும் நிலையில் சிரியாவில் ஈரானுக்கு கால் வைக்க முடியாத நிலை தோன்றும் . ஈராக் அரசு மயானத்துக்கு மேல் வெற்றிகளை கொண்டாடிக்கொண்டு இருக்கிறது . தினமும் ஐ எஸ் போராளிகளின் தற்கொலை தாக்குதல்களுக்கு நூற்றுக்கணக்கான தமது படைகளை பலி கொடுத்துக்கொண்டு இருககிறது ஈராக் . ஈரான், நீண்ட காலத்தில் தாக்குப்பிடிக்க முடியாத யுத்தம் ஒன்றுக்குள் தம்மை ஈடுபடுத்தி உள்ளது. என்பது மட்டும் உண்மை 

ரஷ்யா 
வீழ்ந்து போன செல்வாக்கை நிலை நிறுத்தவும்  தனது ஆதிக்கத்தை பிராந்தியத்தில் மீள நிறுத்துவதற்கும் சிரியாவை விட்டால் சிறந்த  வேறு இடம் ரஷ்யாவுக்கு கிடைக்கப் போவதில்லை . ரஷ்யாவின் தென் பகுதியில் புகையும் இஸ்லாமிய வாதம் மீண்டும் எடுக்கும் என்ற அச்சம் ரஷ்யாவுக்கு வரலாறு படித்துக்கொடுத்த பாடம். செச்சினிய போராட்டம் ரஷ்யாவை பாடாய் படுத்தியதை ரஷ்யா இன்னமும் மறக்கவில்லை . இஸ்லாமிய தேசம் ஒன்று உருவாகும் பட்சத்தில் ரஷ்யாவின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடிக்கக்கூடும் . வராலாற்றில் ரஷ்யா ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ள முன்னாள்

உஷ்மானிய சாம்ராஜ்ய(ottoman)

பகுதிகளில் ரஷ்யா ஆயுத போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும் . பிரச்சினை வீட்டு வாசலுக்கு வரும்  முன்னர் வீதியில் வைத்து சமாளிப்பது மேல் என்பதாய் ரஷ்யா செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது . இராணுவ நடவடிக்கைகளின் போது ரஷ்யா, அசாத்துக்கு எதிராக போராடும் அரபு / துருக்கி சார்பான இயக்கங்களையே அதிகம் இலக்கு வைத்து வருகின்றது . அந்த இயக்கங்களை ரஷ்யா இலக்கு வைக்கும் போது மேற்கு நாடுகளும் அமெரிக்காவும் ஐ எஸ் இலக்குகளை இலக்கு வைக்கும் இதனால் இராணுவ வளங்களை செயல் திறனாக பயன் படுத்த முடியும் என்பது ரஷ்யாவின் திடடம் . சர்வதேச சந்தையில் குறைந்து போயுள்ள மசகு எண்ணெய் விலையால் ஏற்கனவே கடுமையாக பொருளாதார ரிதியாக பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யா , இதே யுத்தத்தை தொடருமானால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் .

நீண்ட காலம் தொடரவுள்ள  இந்த யுத்தத்தில் குறுகிய காலத்தில்  தெளிவான வெற்றியாளர் யாரும் இருக்கப்ப்வதில்லை . இந்த யுத்தத்தின் உருவகம் மாறக்கூடும் ஆனால் குறுகிய காலத்தில் மட்டும் நிறைவு பெறப்போவதில்லை . நீண்ட கால யுத்தத்துக்கு இது இட்டுச்செல்லும் என்பது மட்டும் அறியக்கூடிய உண்மை.

அல்லாஹ்வே யாவற்றையும் அறிந்தவன் .

2 comments:

  1. so finally world war-3 will start soon....

    ReplyDelete
  2. Dis article was so funny.coz dis is not a truth.

    ReplyDelete

Powered by Blogger.