பொது பலசேனாவுக்காக குனூத் ஓதியவர்கள், உம்மாவின் அவலங்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள்..?
-முஹம்மது ராஜி-
இப்போது நாடு இருக்கிற நிலையில் இப்படி ஒரு கவிதை தேவைதானா என்றான் தேசியவாதத்துக்கு எதிராக நான் எழுதிய கவிதைக்கு கருத்துக்கூறிய எனது நண்பன். . அவன் முடிக்கவில்லை. "நாம் நாட்டுக்கு இதுவரை விசுவாசமானவர்களாக இருந்து வந்துள்ளோம் .இனியும் இருப்போம் . இது எமது நாடு . அதை யாராலும் மாற்ற முடியாது " எனறான் தேசிய வெறியோடு அவன். அத்தோடு ரிஷ்வி முப்தி பேசிய சுதந்திர தின வீடியோவையும் வட்சப்பில் அணுப்பி அவனது தேசிய வெறியை உறுதிப்படுத்தினான்.
பிரிட்டிஷ் உட்பட காலநித்துவ ஆட்சிகள் விதைத்த தேசியவாத நச்சு விதைகள் அவனின் உள்ளத்தில் மட்டுமல்ல அநேகர் மனதில் தினமும் குடியரசாக குடியமைத்து வாழ்ந்து வருவதுடன் சுதந்திரமாக ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் கொடி கட்டிப்பறந்து கொண்டிருக்கின்றன .சில வேளைகளில் கசப்பாக இருந்தாலும் உண்மையைக்கூற வேண்டிய காலகட்டத்தில் இருந்து கொண்டிக்கிறோம் .
தேசியவாதம் இஸ்லாத்தில் ஆகுமா .......?
இது நாம் வாழும் நாடுகளின் அரசாங்கங்களை அதிருப்திபடுத்தும் என்ற ஓரே காரணத்துக்காக நம் நாட்டு அநேக ஆலிம்களால் தொடப்படாத கருத்து ...தொட்டாலும் பசப்பி மெழுகு பூசப்பட்டு வரும் விடயம். தேசியவாதம் ஹராம் என்று சொன்னால் உங்களுக்கு எனது கருத்து போல தெரியும் ஆனால் அண்ணல் நபி ( ஸல் ) அவர்களின் கருத்து அது . அது பற்றி ஓரே ஒரு ஹதீஸ் இருந்திருந்தால் அதன் அறிவிப்பாளர் தொடரை அலசி இருந்திருபபார்கள். அல்லது அதற்கு சொந்த வியாக்கியானம் கொடுத்திருப்பார்கள் .. ஆனால் இருப்பதோ மறுக்க முடியாத பல்வேறு கிரந்தங்களில் வெளியாகிய பல ஹதீஸ்கள் ..
நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் மற்றும் சஹாபாக்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்த போது மக்காவை நினைத்து அதிகம் கவலைப்பட்டதையும் கண்ணீர் வடித்ததையும் தேசியம் என்று சிலர் தவறாக கூறுகின்றனர் . இப்றாஹீம் நபி அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட து ஆவுக்கு அமைய மக்கா நகருக்கு அல்லாஹ் அளித்துள்ள எவராலும் விரும்பப்படும் தன்மையே அவர்களை கவலையில் ஆழ்த்திய தே தவிர அவர்கள் அங்கு பிறந்ததனால் அல்ல என்பது இங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயம் .இதனை அங்கு செல்லும் ஒவ்வொரு முஸ்லீம்களும் அனுபவ ரிதியாக உணர்ந்து கொள்ள முடியும். இவ்வாறு இருக்கையில் இந்த சம்பவத்தை தேசிய வாதத்துக்கு ஆதரவாக எப்படி பயன்படுத்த முடியும் ?
வெறும் அரேபியா என்பது சவுதிஅரேபியா ஆனதுக்கும் ,நாம் உலகப்படத்தில் பெருமையோடு பார்க்கும் முஸ்லீம் நாடுகளின் பெரும் எண்ணிக்கைகளுக்கும் ,ஏன் ஓடும் ஒவ்வொரு முஸ்லிம்களின் இரத்தத்துக்கும், அவலத்துக்கும் , அழுகைக்கும் காரணமும் இந்த தேசிய வாதம் தான் ....
ஒன்று பட்டுப்போய் இருந்த உம்மாவை உருக்குலைத்த இந்த தேசியவாதம் சம காலத்தில் எத்தனை சகோதர சாவுகளை கண்டு விட்டது ;இரத்த ஆறுகளை ,இன அழிப்புக்களை ,இனச்சுத்திகரிப்புக்களை கண்டு விட்டது . இந்த தேசியவாதம் நமக்குள் புரையோடிப்போன புண்ணாகி விட்டது .நமது இருப்புக்களுக்காக நாம் மார்க்கத்தை மாற்றும் மன நிலையில் இருந்து இப்போது கொண்டிருக்கிறோம் .
சிலர் சொல்லக்கூடும், சிறுபான்மையினராக வாழும் நாட்டில் நாம் தேசியவாதத்துடனும் விசுவாசத்துடனும் வாழ வேண்டும் என்று ... நாம் இஸ்லாத்தை வாழ்க்கை வழிமுறையாக எடுத்துக் கொண்டவர்கள் . நபி ( ஸல் ) வாழ்க்கை முறையை உதாரணமாக எடுத்துக்கொண்டவர்கள் . இந்த உலகில் நிரந்தரமாக வாழப்போகிறவர்கள் இல்லை .
இஸ்லாமிய அடிப்படைகளை , கோட்பாடுகளை மாற்றாமல் வாழும் நாட்டுக்கு நல்ல பிரஜைகளாக வாழ்வது என்பது வேறு , தேசிய வாத வெறியுடன் வாழ்வது என்பது வேறு .. அவ்வாறு இஸ்லாமிய நடைமுறையில் வாழ முடியவில்லையா ஹிஜ்ரத் செய்யுங்கள் ..என்னடா பெரிய வார்த்தையாக உள்ளது என்று சொல்லுகிறீர்களா ...? .வரலாற்றில் படித்த , நாம் தினம் ஓதும் அல் குர் ஆனில் உள்ள விஷயம் தானே அது ...
இதோ ஹிஜ்ரத் பற்றிய அல்லாஹ்வின் சில வசனங்கள் இவை :
அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) “நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?” என (மலக்குகள்) கேட்பார்கள்; எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும்.
(அல்குர்ஆன் : 4:97)
அரசியல் எல்லை கொண்ட இந்த சுதந்திர நாடுகள் என்ற முறைமை நம் இஸ்லாமிய முறைமை இல்லை . ஒரே கிலாபாவின் கீழ் இருந்த இஸ்லாமிய ஆட்சியை பிரித்ததில் காலநித்துவ சக்திகளுக்கு பெரும் பங்குள்ளது போன்றே இப்போது அரேபியாவை ஆளும் சவுத் குடும்பத்துக்கும் பெரும் பங்கு உள்ளது . ஓரே கிலாபாவின் கீழ் இருந்த புனித மக்கா மற்றும் மதீனா நகரங்களில் கிலாபாவுக்கு எதிராக கலகம் செய்து அரேபியாவை பிரித்து தருமாறு பிரிட்டிஷ் அரசாங்கத்தை கேட்ட பெருமை இப்போதைய சவுத் குடும்பத்தையே சாரும் . ஒவ்வொரு மன்னர் மார் மாறும் போதும் "அவர் இவர் மாதிரி இல்லை " என்று கூறிப் பழகிப்போன நாம், கிலாபாவை வெட்டி அழித்த இதே சவுத் பரம்பரையிடம் வெட்கம் கெட்ட தனமாக விடிவை எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறோம் .
இன்னொரு கிலபா வருவதை முதலில் யார் விரும்ப மாட்டார்கள் என்பதை நீங்களே இப்போது ஊகித்துக் கொள்ளுங்கள். அல்லாஹு தஆலா தன் திரு மறையில் ஒற்றுமை பற்றியும் பிரிவினை பற்றியும் பின்வரும் வசனங்களில் இவ்வாறு கூறுகிறான்.
(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. (அல்குர்ஆன் : 3:105)
மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 30:22)
கண்மணி நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் இதுபற்றி எச்சரித்தவை ஒன்றுக்கு மேற்பட்ட ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகி உள்ளன .அசபியா ( தேசியாவாதம் , கோத்திர வாதம் ,இனவாதம் ,தேசாபிமானம்) அழுகிப்போனவை அவற்றை விட்டு விடுங்கள் (புகாரி )
நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் அசபியாவுக்கு (தேசிய வாதம் ,கோத்திரவாதம் ,தேசியப்பற்று )அழைப்பு விடுப்பவரோ அல்லது அதற்காக போராடுபவரோ அல்லது அதற்காக மரணம் அடைபவரோ நம்மைச்சார்ந்தவர் அல்லர். (அபுதாவூத் )
".....தமது தேசங்களின் பெருமைகளை மக்கள் கைவிட வேண்டும் .ஏனெனில் அது நரக நெருப்பின் எரிபொருளுக்கான எரி பொருள் ஆகும் .அவர்கள் அதை கைவிடா விட்டால் அல்லாஹ் அவ்ர்களை மலத்துக்குள் ஊடறுத்து செல்லும் கீழ்த்தரமான புழு போன்றே அவர்களை கருதுவான் (அபூ தாவுத் ,திர்மிதி )
அசபியாவுக்கு(தேசிய வாதம் , கோத்திரவாதம் ,தேசியப்பற்று ) அழைப்பு விடுப்பவர் தனது தகப்பனின் மர்ம உறுப்பை கடித்தவர் போலாவர் என்று நபிகள் நாயகம் ( ஸல் ) கூறியுள்ளதாக மிஷ்காத் அல் மசாபித்தில் ஹதீஸ் ஒன்று பதிவாகியுள்ளது .
நபிகளார் ( ஸல் ) கூறினார்கள். இறந்து போன தமது மூதாதையரின் பெருமைகளை பாடுபவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் பார்வையில் தனது மூக்கினால் மலத்தை உருட்டிச்செல்லும் கருப்பு பீயுருட்டி வண்டை விட மோசமானதாக இருக்கும் . கேட்டுக்கொள்ளுங்கள் உங்கள் மூதாதையர்களின் பெருமை பாடும் ஜாஹிலியா காலத்தில் இருந்த பெருமைத்தனத்தை அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருந்து நீக்கி விட்டான் .மனிதன் ஒன்றில் அல்லாஹ்வை அச்சப்படும் நம்பிக்கையாளராக அல்லது தூரதிஷ்டம் கொண்ட பாவத்தாளியாக இருப்பான் . அனைத்து மக்களும் ஆதம் நபியின் பிள்ளைகளே .ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவர் .(அத்திர்மிதி ,அபூ தாவூத் )
நபிகள் நாயகம் ( ஸல்) கூறினார்கள் சந்தேகமின்றி ஜாஹிலியா காலத்தில் இருந்த அறியாமைத் தனமான பெருமையையும் ,உங்கள் மூதாதையர்களை பெருமை பாடுவதையும் அல்லாஹ் உங்களிடம் இருந்து நீக்கி விட்டான். இப்போது நீங்கள் இரு வகைபபடுவீர்கள் . ஒன்று அறிவுள்ள இறை நம்பிக்கை கொண்டவர்களாகவோ அல்லது எல்லை மீறும் அத்துமீறுபவர் களாகவோ இருப்பீர்கள் .அனைத்து மக்களும் ஆதம் நபியின் பிள்ளைகளே .ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவர் .தமது தேசங்களின் பெருமைகளை மக்கள் கைவிட வேண்டும் .ஏனெனில் நரகத்தின் எரிபொருளுக்கான எரிபொருளாக அது இருக்கின்றது .அவ்வாறு கைவிடாவிட்டால் , தனது மூக்கினால் மலத்தை உருட்டிச்செல்லும் கருப்பு பீயுருட்டி வண்டை விட மோசமானதாக அல்லாஹ் அவர்களை கருதுவான் ( அபூ தாவூத் ,திர்மிதி )
அல் முறய்சி என்ற தண்ணீர் எடுக்கும் இடத்தில் முஜாஹிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் ஏற்பட்ட பிரச்சினையின் போது இந்த தேசிய வாதத்தையும் கோத்திர வாதத்தையும் பெரிதாக ஆக்கி முஸ்லிம்களை பிளவு படுத்த முனாபிக்குகள் முயன்றனர் . இரு தரப்பினரும் தத்ததமது பகுதியினரையும் கோத்திரத்தவர் களையும் உதவிக்கு அழைத்தனர் .
இதனை கேள்வியுற்ற நபிகள் நாயகம் அவ்விடத்துக்கு விரைந்ததுடன் "ஒ முஸ்லீம்களே அல்லாஹ்வை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ்வை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் . அல்லாஹ் உங்களை கண்ணியப்படுத்தி உங்களை இஸ்லாத்துக்கு வழி காட்டிய பின்னரும் நான் உங்களுடன் உயிருடன் இருக்கும் போதே இஸ்லாத்தை விட்டு வேறு வழியை தெரிவு செய்து கொள்வீர்களா ? ஜாஹிலியா காலத்துக்கு சொந்தமான ஒன்றை ஏன் மீண்டும் கிளறுகிறீர்கள்" என்று மொழிந்ததாக ஜாபிர் இப்ன் அப்துல்லாஹ் அல் அன்சாரி அவர்கள் கூறியுள்ளார்கள். அன்று முழுவதும் அவர்களுடன் நபிகள் நாயகம் ( ஸல் ) இருந்ததாக அந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது .
அத்தபரானி மற்றும் அல் ஹக்கீம் ஆகியவற்றில் பதிவாகிய ஹதீஸ் ஓன்றில் சல்மான் அல் -பாரிஸி அவர்கள் பற்றி சில மக்கள் கீழானவராக பேசிக்கொண்டார்கள் . அரபுக்கள் ஒப்பிடும் போது பாரசீகர்கள் அப்போது கொண்டிருந்த மேன்மை நிலை தொடர்புடன் அவர்கள் அதை பேசினார்கள் இதை கேள்வியுற்ற நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் "சல்மான் எங்களை சேர்ந்தவர் அஹ்லுல் பைத் ( நபிகளாரின் குடும்பம் )"என்று கூறினார்கள் .
இப்ன் அல் முபாரக் அவர்களின் அல் பிர்ர் அல் ஸலாஹ் ஆகிய இரு நூல்களில் பின்வரும் ஹதீஸ் பதிவாகியுள்ளது "பிலால் (ரலி ) அவர்களுக்கும் அபூ தர் (ரலி ) அவர்களுக்கும் இடையே கருத்து முரண்பாடு தோன்றிய போது அபூ தர் (ரலி ) 'கருப்பு பெண்ணின் மகனே ' என்று கூறினார்கள். இதை கேட்டதும் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் மிகவும் கோபத்துடன் "அது மிகவும் அதிகமானது அபு தர் , வெள்ளை தாயை கொண்டவர் கருப்பு தாயை கொண்டவரை விட எந்த வகையிலும் சிறப்பானவர் இல்லை"என்று கூறினார்கள். இது அபூ தர் (ரலி ) அவர்களுக்கு கடும் கவலையை ஏற்படுத்தியதுடன் தனது தலையை நிலத்துடன் வைத்துக்கொண்டு தன் தலை மிது பிலால் (ரலி ) அவர்கள் பாதத்தை வைக்கும் வரை தலையை எடுக்கப்போவதில்லை என்று சத்தியம் செய்தார்கள் .
எனவே இஸ்லாம் நிறம், இனம் , குலம்,கோத்திரம் , தேசியம்,பிரதேசம் ஆகியவற்றுக்கு அப்பால் முஸ்லிம்களை சகோதரர்களாக நோக்குகின்றது .பிரிவினைகளை தடுக்கிறது ; தேசியம், பிராந்தியம் அடிப்படையிலான பெருமைகளை கடுமையாக கண்டிக்கின்றது . ஒருவரை அடையாளப்படுத்து வதற்காக பயன்படுத்தப்படும் சொற்பிரயோகம் சமூகத்தை கூறுபடுத்த பயன்படுத்தப்படக்கூடாது . நபிகள் நாயகம் ( ஸல் ) கூறினார்கள் "உம்மா என்பது ஒரு உடல் போன்றது உடலில் எந்த பகுதியில் காயம் ஏற்பட்டாலும் முழு உடலும் அதை உணர வேண்டும் "
ஆனால் அந்த காயத்தை உணர மறுக்க வைப்பதில் தேசியவாதம் பெரும் பங்கு ஆற்றுகிறது .. அதனால்தான் பொது பல சேனா பிரச்சினையின் போது குனூத் ஓதிய நாம் சிரியாவில் பிரச்சினை எனும் போது போட்டோக்களோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறோம் . நமக்குள் ஊறிப்போயுள்ளது நாம் மட்டும் என்ற தேசியவாத தோல் போற்றப்பட்ட சுய நலவாதம். எனவே நமக்குள் புரையோடிப்போய் இருக்கும் இந்த புண்ணை நம் உடலின் ஏனைய பகுதிகளுக்கு பரவ முன் குணப்படுத்துவோமாக ..ஆமீன்
நம்மில் அநேகர் மன இச்சையை மார்க்கமாக ஆக்கிக் கொண்டுள்ளனர்!
ReplyDeleteமார்க்கம் கூறிய வழியில் நடப்பதை விடுத்து, தமது செயற்பாடுகளுக்கு மார்க்கத்தில் ஆதாரம் தேடுகின்றனர்!
மார்க்கத்தில் தமது நிலை பற்றி சிந்திப்பவரோ, சுயமதிப்பீட்டைச் செய்பவரோ இல்லை! அனைவரும் அடுத்தவனில் பிழை தேடுவதிலும், அவர்களை மனம் போனவாறு விமர்சிப்பதிலும், தூற்றுவதிலும், பட்டப் பெயர் சூட்டி, நையாண்டி பண்ணுவதிலும் தமது முழுச் சக்தியையும் செலவழிக்கிறார்கள். அதனைச் செய்து விட்டால் தாம் ஒரு உத்தம இஸ்லாமியனாக உள்ளோம் என்ற மாயையில் மூழ்கி உள்ளனர்.
சுய இலாபங்களுக்காக தேசியம், தேசியத் தலைமை, பிரதேசம் போன்ற சொற்களைத் தாராளமாகவே பேசி முஸ்லிம்களை எவ்வாறெல்லாம் கூறு போடலாமோ அவ்வாறெல்லாம் பிரித்தாளும் நரித்தனத்தில் மூழ்குகின்றனர்.
தேசபகதி இருப்பது வரவேற்கப்படலாம், அதுவே மார்க்கத்தை விலையாக்குவதாக மாறிவிடக் கூடாது. நியாய, அநியாயங்களைத் தீர்மானிப்பதாக ஆகிவிடக் கூடாது.
மதவாதிகளும் அரசியல் வியாபாரிகளுக்கு சோரம் போய் விட்டார்கள். மார்க்கம் தேவைக்கேற்றபடி விளக்கப்படுகின்றது.
we ask kunooth to forgive our sins and mistakes ! not for BBS or to any others.it is a way shown by our beloved rasool -to bring down allas help in a bad situation. allah helpd us and changed .
ReplyDeletethesiya wadam enbadu ungal katpanai . ungal karuttu pilayandu ! idarku adaram wera !
கட்டுரையாளரே நீங்கள் கூறுவது சரிதான் நாங்கள் வழிகேட்டில் இருக்கிறோம் இருந்து கொன்டே இருக்கிறோம்.
ReplyDeleteஇது இப்போது ஆரம்பித்த பிரச்சினையுமல்ல சவுத் பரம்பரை தோற்றுவித்ததுமல்ல.
இது கிலாபத்துடைய 3ம் கலீபாவான உஸ்மான் ரழி அவர்களின் பிந்திய ஆட்சிகாலத்தில் தோற்றம் பெற்றது.
வறலாற்றை படிக்கும்போது நபி ஸல் அவர்களின் காலத்துக்கு பிறகும் உமர் அழி அவர்களின் ஆட்சிக்கு பின்னர் ஒற்றுமையில் நமது சமுதாய போக்கை நினைக்கையில் கன் கலங்குகிறது.
எவறையும் குறை கான விரும்பவில்லை ஏனெனின் அதில் பழி ஆனவர்கள் மிகப்பெரிய சஹாபாக்கள் இதுக்கு காரனம் அவர்களல்ல இந்த தேசிய வாதமும் பிரேதேச வாதமும்
இது சமூகத்தின் சாபக்கேடு.
POTHUNANA SENA ENDRA IYAKKATTUKKU KUNOOTH OZIYAZAHAKURIPPITTU
ReplyDeleteULLA INDAVISAYA , ANNIYAWARGALAI INNUM THUNDUWAZAHATTAN IRUKKUHIRAZU INDA SEYZIYAY APPADIYE ANNIYAWANUKKU TRANSLATE PANNI KANBIKKA MUSLI MUNAFIKHAL IRUKKUHIRARGAL ,ADUTTAZU IZAI PIRASURIKKAMUN THALAYANGATTAI PARTHAZUM INNUM THUWESAMUMTHAN ......MUZALAVAZU JAFFNA MULIM KONJAM YOSITTU PIRASURIKKAVUM
Nationalism is Wrong... OK what About Groupism, such as IHWAANNUL MUSLIMEEN, JAMAATH E ISLAMI, TABLIGEE , SOOFEES, SLTJ, TNTJs and so on
ReplyDeleteLIKE Nationalism.. These GROUPISM also Divide our MUSLIM UMMAH, is it ?
SO LET US NOT SUPPORT any IHWAANISM
Rather stick to the call of MUHAMMAED (SAL) and BE UNITED AS MUSLIMS and FOLLOW THE WAY of SALAF US SALIHEENS.