Header Ads



நாமலும், பசிலும் கைது செய்யப்படலாம்..!!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோரும் கைது செய்யப்படக் கூடுமென கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரது சிரேஸ்ட புதல்வர் நாமல் ராஜபக்ஸ மற்றும் சகோதரர் பசில் ராஜபக்ஸ ஆகியோரும் கைதாகக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்கள் பணத்தை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்படக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோரின் உள்ள விமானப் பயணச் செலவுகள் 150 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நாமல் மற்றும் பசில் ஆகியோரை விரைவில் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. கைதுகள் யாவும் மன்னர் மகிந்த & co மீண்டும் ஒரு முறை வலம் வர முதலீடாகி விடுமோ?

    ReplyDelete

Powered by Blogger.