ஹுசைனுக்கு எதிராக இலங்கையர்களினால், ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரiவியன் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னுக்கு எதிராக வழக்குத் தொடர வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாக அல் ஹூசெய்ன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றில் இந்த வழக்குத் தொடரப்பட உள்ளது.இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையில் அல் ஹூசெய்ன் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 13.2 பிரகடனம் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயம் குறித்து வெளிநாட்டு நீதவான்களிடம் சட்ட ஆலோசனைப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் ஒருவருக்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றில் தொடரப்பட உள்ள முதல் வழக்கு இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment