Header Ads



மத்­ர­ஸாவை நிரந்­த­ர­மாக மூடி­வி­டுங்கள் - சிங்களவர்கள் அடம்பிடிப்பு, முஸ்லிம்கள் மறுப்பு


 -ARA.Fareel-

பண்­டா­ர­கம ஹொரன எலு­வி­லவில் அமைந்­துள்ள மத்­ர­ஸாவின் முதலாம் மாடி நிர்­மா­ணப்­ப­ணி­களை உடன் நிறுத்­தும்­ப­டியும் மத்­ர­ஸாவை நிரந்­த­ர­மாக மூடி­வி­டும்­ப­டியும் அப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த குரு­மார்கள் உட்­பட சுமார் 200 பெரு­பான்மை இனத்­த­வர்கள் பிர­தேச செய­லா­ளரை நேற்று (17) வலி­யு­றுத்­தி­னார்கள்.

எலு­வில மத்­ர­ஸாவின் முத­லாம்­மாடி நிர்­மா­ணப்­ப­ணி­களை நிறுத்­தும்­படி குரு­மார்கள் கோரி­யுள்­ள­தா­கவும், இது எதிர்­கா­லத்தில் பள்­ளி­வா­ச­லாக மாற்­றப்­ப­டலாம் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டு பிர­தேச செய­லாளர் நிர்­மா­ணப்­ப­ணி­களை நிறுத்­தும்­படி மத்­ரஸா நிர்­வா­கி­க­ளுக்கு கடிதம் அனுப்­பி­யி­ருந்தார்.

ஆனால் நிர்­மாணப் பணிகள் சட்­ட­ரீ­தி­யாக அனு­ம­தி­பெற்றே முன்­னெ­டுக்­கப்­பட்­டன. பாணத்­துறை உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் மத்­ரஸா நிர்­வா­கி­களை நேற்று பொலி­ஸுக்கு அழைத்­தி­ருந்தார். 

அங்கு குரு­மார்கள் உட்­பட பெருந்­தொ­கை­யான பெரும்­பான்மை இனத்­த­வர்கள் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர்.

பிர­தேச செய­லா­ளரும் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தார். கட்­டட நிர்­மா­ணத்­துக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் முறைப்­பாடு கிடைத்­த­தை­ய­டுத்து நிர்மாணப்பணிகள் தன்னால் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அங்கு நடை­பெற்ற விசா­ர­ணையில் பிர­தேச செய­லா­ள­ரினால் தெரி­விக்­கப்­பட்­டது.

என்­றாலும் அங்கு பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த பெரும்­பான்மை இனத்­த­வர்கள் மத்­ரஸா நிரந்­த­ர­மாக மூடப்­பட வேண்­டு­மெ­ன­வ­லி­யு­றுத்­தினர்.

இத­னை­ய­டுத்து பாணந்­துறை பொலிஸார் பாணந்துறை நீதிவான் நீதி­மன்­றுக்கு இவ்விவகாரத்தை கையளிப்பதாக தெரிவித்தார்.

இன்று மத்ரஸா நிர்வாகிகள் நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

மத்ரஸாவின் தரப்பில் RRT சட்டத்தரணி சப்ராஸ் ஹம்ஸா பொலிஸாருடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

2
பாணந்­துறை எலு­வில  அரபு மத்­ர­ஸாவின் மேல்­மாடி நிர்­மா­ணப்­ப­ணிகள் சட்ட ரீதி­யாக பிர­தேச செய­லா­ள­ரி­ட­மி­ருந்து  அனு­மதி பெற்றே  ஆரம்­பிக்­கப்­பட்­ட­தெ­னவும்  சட்ட விரோ­த­மான நிர்­மாணம் என்றால் நீதி­மன்றம் மூலம்  நட­வ­டிக்கை எடுக்கும் படி எலு­வில அரபு மத்­ர­ஸாவின் நிர்­வா­கிகள் பாணந்­து­றைக்குப் பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரிடம்  தெரி­வித்­தனர். 

எலுவில அரபு மத்­ர­சாவின்  மேல்­மாடி நிர்­மா­ணப்­ப­ணி­க­ளுக்கு அனு­மதி வழங்­கி­யி­ருந்த பண்­டா­ர­கமை பிர­தேச  செய­லாளர்  பின்பு நிர்­மாணப் பணி­களை நிறுத்­தும்­படி மத்­ரஸா நிர்­வா­கி­க­ளுக்கு உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்தார்.

 பிர­தேச செய­லாளர் மத்­ரஸா நிர்­வா­கத்­துக்கு அனுப்பி வைத்­துள்ள  கடி­தத்தில் மத்­ர­ஸாவின் மேல் மாடி நிர்­மா­ணிக்­கப்­பட்டால் எதிர்­கா­லத்தில் அது பள்­ளி­வா­ச­லாக  மாற்றம் காணும் என பெளத்த பிக்­குகள் சிலர் ஆட்­சே­பனை தெரி­வித்­துள்­ளதால் நிர்­மா­ணப்­ப­ணி­களை நிறுத்­தும்­படி உத்­த­ரவு வழங்­கி­யி­ருந்தார். 

 இவ்­வி­வ­காரம் தொடர்­பாக கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பாணந்­துறை  சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அலு­வ­ல­கத்தில் மாநாடு  ஒன்று  நடாத்­தப்­பட்­டது. அதில் கலந்து கொண்ட பெரும்­பான்மை இனத்­த­வர்கள் மத்­ர­ஸாவை  மூடி­விடக் கோரி­யதால் இவ்­வி­வ­காரம்  நேற்று பாணந்­துறை  நீதிவான் நீதி­மன்­றுக்கு  பாரப்­ப­டுத்­தப்­பட்­டது. 

இவ்­வி­வ­காரம் வழக்­கொன்று தொடரும்  வகை­யி­லா­ன­தல்ல என பாணந்­துறை நீதவான் ருச்­சிர வெலி­வத்த  தெரி­வித்­த­தை­ய­டுத்து நேற்று மீண்டும் பாணந்­துறை சிரேஷ்ட  பொலிஸ் அத்­தி­யட்­சகர் காரி­யா­ல­யத்­துக்கு மத்­ரஸா நிர்­வா­கிகள்  அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். 

மத்­ரஸா நிர்­வா­கி­களின் தரப்பில் R.R.T அமைப்பின் சட்­டத்­த­ர­ணிகள்  ரமீஷ் பஸீர், மைத்­திரி குண­ரத்ன என்போர் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர். 

எலு­வில மத்­ரஸா மேல்­மாடி நிர்­மாணப் பணி­க­ளுக்கு பண்­டா­ர­கம பிர­தேச  செய­லா­ளரின்  அனு­மதி பெறப்­பட்­டுள்­ளதால் அதனை  எவ­ராலும்  தடை­செய்ய முடி­யா­தெ­னவும்  இங்கு எவ்­வித சட்­ட­வி­ரோத நிர்­மா­ணங்களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனவும் மத்­ரஸா தரப்பில்  தெரி­விக்­கப்­பட்­டது.  

குற்றம் ஒன்று இழைக்­கப்­பட்­டி­ருந்தால் தண்­டனைச் சட்­டக்­கோ­வை­யின்­படி  வழக்குத் தொடரலாம் எனவும் தெரிவித்தனர்.

இந்த  விவகாரத்துக்கு உடனடித்  தீர்வு பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனவும் இல்லையேல் அளுத்கம மற்றும்  பேருவளையில் நடைபெற்ற சம்பவங்கள்  போன்று இங்கும் நடக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். 

1 comment:

  1. இது எலுவிலைக்கு மாத்திரம் உரித்தான செயல் அல்ல. காலாகாலமாக நாட்டின் பல்வேறு முஸ்லிம் பிரதேசங்களிலும் இந்த அநீதி இடம்பெற்று வருவதை நாம் அறிவோம். முஸ்லிம்கள் தமது சிறார்களை இது போன்ற மத்ரஸாக்களில் தஃலீமுல் குர்ஆன் மற்றும் ஏனைய சமய பாடங்களை கற்று வருவதை ஏன் தான் இந்த யகூதிகள் எதிர்த்து வருகின்றார்கள் என்பது புரியவில்லை. சட்ட ரீதியாக கட்டிட நிர்மாணத்துக்கான அனுமதியை நினைத்தால் வழங்குவதும் நினைத்தால் மறுப்பதும் இந்தக் கபோதிகளுக்கு வாடிக்கையாகி விட்டது.
    இதுவெல்லாம் தாம் தான் இந்த நாட்டில் மஜோரிட்டியாக இருக்கின்றோம் என்ற மமதையே தான் காரணம்.
    நாம் சட்ட ரீதியாகவே இதனை அணுகி தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பண்டாரகமை பிரதேச செயலாளரான அம்மண்டி என்ன சொன்னாலும் இந்த அனுமதி மறுப்புக்கு அவளுக்குப் பின்னால் அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட்டு மூக்குடைபட்டிருக்கும் கும்பலொன்று செயற்படுவதாக நாம் சந்தேகிக்கின்றோம்.
    நமக்கிருக்கும் ஆதங்கம் என்னவென்றால் இது போன்ற பெளத்த மேலாதிக்க எண்ணத்தை முறியடிக்க நமது முஸ்லிம்களின் ஏகோபித்த ஆதரவுடன் பதவிக்கு வந்த இந்த யஹபாலனய எனும் "நல்லாட்சியிலும்" விமோசனம் கிடைக்காமல் போய் அதுவும் "பொல்லா ஆட்சியாக" மாறினால் நாம் எங்கு சென்று நமது மத சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளுவது?
    நமக்கு கிடைக்கப் பெற்றுள்ள அருமையான நமது முஸ்லிம் பச்சோந்தித் தலைவர்களும் இது போன்ற விடயங்களை ஒரு காதினால் வாங்கி மறு காதினால் விட்டு விடும் அளவுக்கு அவர்களின் காதுகளிலும் ஓட்டை விழுந்து விட்டது. என்ன நிலைமை ஏற்பட்டாலும் எமது எலுவிலை சகோதரர்கள் இந்த விடயத்தில் ஒற்றுமையாக இருந்து அனுமதிப் பத்திரத்தின் படி மத்ரசாவின் இரு மாடிக் கட்டடத்துக்குமான நிர்மாணத்தைப் பெற்றே தீருவது என்பதில் உறுதியாக நின்று செயற்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.