தேசிய ஷூரா சபையின் சுதந்திர தின நிகழ்வுகளுக்கு, அரசியல்வாதி முட்டுக்கட்டை
நல்லாட்சியில் ஜனநாயக விரோத நடவடிக்கை இடம்பெறுவது கவலை தருகின்றது.
தேசியவாழ்வில் முஸ்லிம்களது வரலாற்றுப் பங்கேற்றலை உறுதிப்படுத்தும் விதத்தில் தேசிய ஷூரா சபை இம்முறை குருணாகல் மாவட்டத்தில் ஒருநிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தமை அறிந்தமையே.
இறுதி நேரத்தில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியின் அமைப்பாளர் அதனை நிகழத்தவிடாமல் முட்டுக் கட்டைகளை போட்டு வருகின்றார், குறிப்பிட்ட அரசியல் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஒருவருடன் நேரடியாக கதைத்தும் பயனளிக்கவில்லை.
இன்ஷாஅல்லாஹ், இறுதி முடிவை தேசியஷூரா சபை இன்று நண்பகல் உத்தியோக பூர்வமாக அறிவிக்கும்.
தற்பொழுது குறிப்பிட்ட கட்சியின் தலைவரின் கவனத்திற்கு விடயம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம்களுக்கான பலமான ஒரு சிவில் தலைமைத்துவமாக வளர்ந்துவரும் தேசிய ஷூரா சபை மேற்படி விவகாரத்தை அரசியலாக்க விரும்பாமையினாலும் ஒருசிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகளை குறித்த தேசிய கட்சியின் நிலைப்பாடாக கருதாமலும் பொறுப்புடன் மேற்படிவிவகாரத்தை கையாளவே விரும்புகின்றது.
என்றாலும் உண்மையான காரணத்தை மக்கள் அறிந்து கொள்வதற்கான உரிமையும் இன்ஷாஅல்லாஹ் உரிய சந்தர்பத்தில் அவற்றை வெளிப்படுத்துவதற்கான உரிமையும் தேசிய ஷூரா சபைக்கு இருக்கின்றமையையும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளோம்.!
Post a Comment