ராஜபக்ஸவினர் பற்றி இதுவரை வெளியாகாத தகவல்கள், பகிரங்கப்படுத்த காத்திருக்கும் சுமனதாஸ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தனவும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான தகவல்களை அம்பலப்படுத்த முன்வந்துள்ளார்.
நேற்று முன்தினம் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுமணதாச தொலைபேசி ஊடாக ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல்கள் குறித்து சிற்சில தகவல்களை வெளியிட்டிருந்தார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பதினைந்து ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய மாளிகையொன்று இருப்பதாகவும், எனினும் அது அவரது பெரியப்பா மகள் நிரூபமாவின் கணவர் திருநடேசனின் பெயரில் இருப்பதாகவும் சுமணதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன் மஹிந்தவின் பிரதான மெய்ப்பாதுகாவலரான மேஜர் நெவில் ஹம்பாந்தோட்டையில் பாரிய மாளிகையொன்றைக் கட்டிக் கொண்டிருக்கும் தகவலையும் சுமணதாச வெளியிட்டுள்ளார்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக வசீம் தாஜுதீன் கொலை மற்றும் லசந்த கொலைச்சம்பவம் போன்றவற்றில் சந்தேகிகப்படும் கெப்டன் திஸ்ஸ என்பவரும் ராஜகிரியவில் பாரிய மாளிகையொன்றை நிர்மாணித்திருப்பதாகவும்,
மேற்குறித்த அனைத்து மாளிகைகளுக்கும் அடிக்கல் நட சுபநேரம் குறித்துக் கொடுத்தது தானே என்றும் சுமணதாச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ராஜபக்ஷவினரின் இதுவரை வெளியாகாத ஏராளம் தகவல்களை தொடர்ந்தும் வெளியிட தான் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
No use. My3 and Ranil has confirmed that they will not take action against Mahinda and First Lady.
ReplyDeleteபண்டைய கால அரசர்கள் இரகசிய நிலவறைகளை நிர்மாணித்து முடித்ததுமே அதைக்கட்டிய கொத்தனாரைக் கொன்று புதைத்துவிடுவார்கள்.
ReplyDeleteசுமணதாஸ நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்!