மகிந்தவின் சுதந்திர தின செய்தி..!
தேசிய சுதந்திரத்திற்கான பயணம் மீள ஆரம்பிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திரம், பௌதீக ஒருமைப்பாடு, ஸ்தம்பிதமடைந்துள்ள தேசிய பொருளாதார அபிவிருத்தி, தேசிய சுயமரியாதையை மீள கட்டியெழுப்புதல் போன்றவற்றுக்காக தொடர்ந்து செயற்பட போவதாகத் தெரிவித்துள்ளார்.
தம்மையும் தமது ஒட்டுமொத்த குடும்பத்தையும் சிறையில் அடைத்தாலும் தேசிய சுதந்திரத்தை உறுதி செய்ய போராடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர தின செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னர் வெளிநாட்டு சக்திகள் இலங்கையர்களை பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நான்கு தசாப்த கால யுத்தத்தின் மூலம் தமது இலக்குகளை எட்டிக்கொள்ள முடியாத பிரிவினைவாதிகள் வெளிநாட்டு சக்திகளின் ஊடாக இலங்கையர்களை பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளின் ஒத்துழைப்புடன் பிரிவிணைவாத சக்திகள் தங்களது இலக்குகளை எட்ட முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முதல் இதுவரையில் முடிவற்ற வகையில் வெளிநாட்டுபிரதிநிதிகள் இலங்கை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சக்திகளின் அழுத்தம் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இலங்கை படைத்தரப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
யுத்த வீரர்களை யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 4ம் திகதிக்கு முன்னதாக கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரை கைது செய்யுமாறு வெளிநாட்டு சக்திகள் தற்போதைய அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிக் குற்றச் செயல்களின் அடிப்படையில் இவ்வாறு கைது செய்யுமாறு வெளிநாட்டு நிதி உதவியுடன் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கோரியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ தளபதி பீலட்மாஸ்டர் சரத் பொன்சேகா இவர் இராணுவத்தில் நாட்டுக்கு சேவை செய்தவரா இல்லையா இவரை ஏன் கைது செய்து அவரை சிறையில் அடைத்து இழிவுபடுத்தினீர் அவருடைய நண்பர்களை நாட்டைவிட்டும் தூரமாக்கினீர் இதை எந்த வெளிநாட்டுகாரனின் தூண்டுதலால் செய்தீர் என்ன உங்களின் தாய்மட்டும்தான் அம்மாவா? ஏனையவர்களின் தாய் என்ன???
ReplyDeleteஇவை யாவும் உண்மையிலே உண்மை தானா?
ReplyDeleteAiyya...Antha thundai kalutthil potta ellorum sernthu ninnaathaalthan athu unmayana suthanthiramo.....? Sorry appathaan...LTTE ku panam kuduttu thanthiramaa naattai kollayadikkalam enna???
ReplyDeleteதன்னை விட அறிவாளி யாரும் கிடையாதோ....இந்த நாட்டில் உங்களுக்குத்தான் சட்டத்தினை நினைத்தவாறு மாற்றமுடியும் எனும் கடந்தகால வறலாற்றினைவத்து பேசநினைக்கின்றீர்கள் அதுமலையேரிவிட்டது..
ReplyDelete