"முஸ்லிம்களே" இந்த பௌத்த விகாரை உங்ளுடையது - சுபோதி தேரின் உணர்ச்சிமிகு பேச்சு
2014 ஜூன் மாதம் 15 ஆம் திகதியும் அதனை அடுத்து வந்த நாட்களிலும் தர்கா நகர், அளுத்கம, பேருவளை மற்றும் அதனை அண்டிய முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஏற்படுத்தப்பட்ட வன்முறைகளானது, இலங்கை யில் மனிதநேயம் கொண்டவர்களை மட்டுமல்லாது சர்வதேசமெங்கும் பரந்து வாழும் மனிதாபிமானிகளைப் பெரிதும் பாதித்தது. நீண்டகாலமாக ஒற்றுமையுடன் வாழ்ந்த முஸ்லிம் சிங்கள சமூகத்திடையே பெரும் கீறல் ஒன்று விழலானது.
இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடாது என்பதில் நாட்டிலுள்ள நடுநிலையாக சிந்திக்கும் சிங்கள பௌத்தர்களும் முஸ்லிம்களும் கவனமாக இருந்தனர்.
இன நல்லிணக்கத்திற்கு ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் அளுத்கம மற்றும் பேருவளை பகுதியில் இயங்கும் அரச சார்பற்ற சமூக தொண்டு நிறுவனங்கள் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
முக்கியமாக இன விரிசலுக்கு காரணமாக இருந்த கடும்போக்கு வாதிகள் முஸ்லிம் சமூகத்தையும் இஸ்லாத்தையும் புரிந்துகொள்ளும் விதமாக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை வரவேற்கத்தக்கது.
அந்தவகையில், அளுத்கம வன்முறைகள் ஆரம்பமான பதிராஜகொடை விகாரை கிணற்றினை முஸ்லிம் நிறுவனமொன்று புனரமைத்துக்கொடுத்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட விகாரையின் பீடாதிபதியின் உரை முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த வெற்றியென்றே கூறவேண்டும்.
தர்கா நகர் பதிராஜகொடை பிரதேசமானது சிங்கள முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் பிரதேசமாகும். இப்பிரதேசத்தில் நீண்டகாலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. பிரதேசத்தை சேர்ந்த சிங்கள முஸ்லிம் மக்கள் பதிராஜகொடை ஸ்ரீ விவேகாராமை விகாரையில் அமைந்துள்ள கிணற்றிலிருந்தே தமக்கு தேவையான குடிநீரை பெற்றுவந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இக்கிணறு பாவனைக்கு ஒவ்வாத முறையில் பழுதடைந்து போனமையினால் விகாரை மற்றும் விகாரையினை சூழவுள்ள மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
இக்குறைபாட்டினை பிரதேச மக்களின் நன்மை கருதி பதிராஜகொடை ஸ்ரீ விவேகாராமை விகாரையின் பீடாதிபதி படல கும்புரே அரியசாந்த தேரர் பேருவளை பிரதேச செயலாளர் கே. ஜீ. டீ. சதுர மல்ராஜின் கவனத்திற்கு கொண்டுசென்றார்.
பேருவளை பிரதேச செயலாளர் இது தொடர்பில் பேருவளையில் பல சமூக அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டுவரும் அத்தக்வா நலன்புரி நிலையத்தின் தலைவர் எம். ஏ. எம். அஸ்லமின் கவனத்திற்கு கொண்டுசென்றதையடுத்து இக்கிணற்றினை புனர்நிர்மாணம் செய்வதற்கான பூரண அனுசரணையினை அத்தக்வா அமைப்புக்கு வழங்கியிருந்தார்.
புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இக்குடிநீர்க் கிணறு அண்மையில் பேருவளை பிரதேச செயலாளரினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
இக்கிணற்றின் மூலம் பதிராஜகொடை விகாரை மற்றும் பிரதேசத்தை சேர்ந்த ஏராளமான சிங்கள, முஸ்லிம் குடும்பங்கள் நன்மையடையவுள்ளனர். மூவின மக்களும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் வலதர ஸ்ரீ பூதி தேரர் உட்பட பிரதேசத்தின் பௌத்த, இஸ்லாமிய கிறிஸ்தவ மதகுருமார்கள் பிரதேசத்தில் இன நல்லிணக்கம் ஏற்படவேண்டியதன் அவசியம் குறித்து சொற்பொழிவாற்றி மக்களை ஒற்றுமையின்பால் அழைத்தமைநல் லிணக்கம் ஏற்படவேண்டியதன் அவசியம் குறித்து சொற்பொழிவாற்றி மக்களை ஒற்றுமையின்பால் அழைத்தமை குறிப்பிடத்தக்கது.
வலத்தர சுபோதி தேரர்
கடந்த 2014 ஆம் ஆண்டு அளுத்கம பத்திராஜ கொடையில் இடம்பெற்ற கறைபடிந்த வரலாறு ஐக்கிய நாடுகள் சபை வரையில் சென்றது அதேபோன்று 2016 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி நடக்கும் இந்த சிங்கள முஸ்லிம்களின் நல்லிணக்க உறவின் வெளிப்பாடு உலகெங்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று பேருவளை கெத்தாராம விகாராதிபதி வலத்தர சுபோதி தேரர் கூறினார்.
தேரர் தொடர்ந்தும் கூறியதாவது;
ஆரம்பத்தில் இங்குள்ள முஸ்லிம்கள் இந்த பத்திராஜகொட விகாரையையும் பேணிப் பாதுகாத்த வரலாறுண்டு. அதேபோன்று விகாரைக்குச் சொந்தமான பொதுக் கிணற்றை சிங்கள மக்களோடு முஸ்லிம்களும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த உறவு மீது கடந்த காலங்களில் மண் விழுந்த போதிலும் இந்தக் கிணற்றை பெரும் பணச் செலவில் புனரமைத்துக் கொடுக்க அத்தக்வா நலன்புரி அமைப்பு முன்வந்தமை விகாரை வரலாற்றில் நிச்சயம் பதிவாகும். இதற்காக அர்ப்பணிப்புடன் முன்வந்த அமைப்பின் தலைவர் அஸ்லம் ஹாஜியார் பாராட்டப்பட வேண்டும்.
பேருவளை முஸ்லிம்களுக்கு ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு இருக்கிறது. யெமன் தேசத்திலிருந்து வந்த அரபி வர்த்தகர்களில் ஒருவர் பேருவளையில் குடியேறி இங்குள்ள சிங்கள பெண் ஒருவரை மணந்ததன் மூலம் உருவான பரம்பரையே இங்குள்ள முஸ்லிம்கள்.
அன்றிருந்த உறவு மீண்டும் மலர்ந்துள்ளமை கண்டு அனைவரும் பெருமைப்பட வேண்டும். முஸ்லிம்களே இந்த விகாரை உங்ளுடையது. நீங்கள் அச்சமின்றி வந்து பங்களிப்புச் செய்யுங்கள். மீண்டும் முன்பு நிலவிய நல்லுறவு யுகத்தைக் காண்போம் என்றார்.
பிரதேச செயலாளர் சதுர மல்ராஜ்
இன்று 'சிங்ஹ லே' என்ற புதியதோர் இரத்தம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தமிழ் இரத்தம், முஸ்லிம் இரத்தம் என்று குருதிகள் உருவாகி நாட்டில் இரத்தக் களறி ஒன்றுக்குத் தான் வழிவகுக்கும். கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேல் இந்த வேற்றுமையின் பாரிய விளைவுகளை நாம் அனுபவித்தோம். இனியும் அந்த யுகம் வேண்டாம்.
இந்தக் கிணறு அமைத்துக் கொடுக்கும் கைங்கரியத்தால் பத்திராஜ கொடையில் அன்று படிந்த கறை மறைந்தோடிவிட்டது என்றே கூறலாம். இதற்காக முன்வந்த முஸ்லிம் அமைப்புக்கு நாம் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
மௌலவி பைரூஸ்
ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்படி எமது அல் குர்ஆன் போதனை புரிகிறது. இது எந்த இடத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் மக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது என்பதாகும். இந்த அல்குர்ஆனின் கூற்று இப்போது இந்த இடத்தில் நிலை நாட்டப்பட்டிருக்கிறது.
இதேபோன்றே புத்தரும் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அன்பு, கருணை வழிகளையே போதித்திருக்கிறார்கள்.
இன்று ஒரு சில முஸ்லிம் நாடுகளில் தலை காட்டிக் கொண்டிருக்கும் அடாச் செயல்கள் முஸ்லிம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுக்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இக்கொடும் செயல்களைப் புரிவோருக்கு நிச்சயம் அல்லாஹ்வின் தண்டனை கிடைத்தே தீரும். இஸ்லாம் என்பது சாந்தியையும் சமாதானத்தையும் விரும்பும் மார்க்கமாகும்.
சரண பொதி ஹாமு தேரர்
ஆண்டு எது என்று குறிப்பிடப்பட முடியதளவுக்கு மிகவும் பழைமை வாய்ந்த இந்த கிணறு முன்பிருந்தே இப்பகுதி சிங்கள, முஸ்லிம் மக்களால் குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இது அண்மைக்காலமாக பாவிக்க முடியாது அசுத்தமடைந்திருந்தது.
இதனை அத்தக்வா என்ற முஸ்லிம் அமைப்பு சீர் செய்து எமது மக்களுக்கு நீர் குடிக்க வழி செய்துள்ள தர்மம் மேலானதாகும்.
அருட் தந்தை சமிந்த ரொசான்
நாம் பருகும் நீர் எங்கள் உடலைச் சுத்தம் செய்வது போல இந்தக் கிணற்றுநீர் நிச்சயம் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தவே செய்யும். கடந்த கால கசப்பான நிகழ்வு பத்திராஜ கொடையை மிகவும் அசுத்தப்படுத்தியது. இப்பகுதி விகாரையின் கிணற்றை முஸ்லிம்கள் சுத்தம் செய்து கொடுத்ததன் மூலம் நீரைப் பருகும் போதெல்லாம் இன நல்லுறவு வலுத்து உள்ளம் தூய்மை பெறவே செய்யும்.
கிணறு புனரமைப்பில் பிரதான பங்கு வகித்த அத்தக்வா நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.ஏ.எம். அஸ்லம் உரையில் அனைவரையும் விளித்து இங்கு இடம்பெற்ற அனைவரதும் உரைகளை நான் வரவேற்கிறேன்.
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்று மிக மிகச் சுருக்கமாக உரையாற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
(விடிவெள்ளி)
வரவேட்கத்தக்க விடயம்.நன்றிகள்.இதில் குறிப்பிடும் ஒற்றுமை என்னும் கயிறு இல்லை அல்லாஹ்வின் மார்க்கம் என்னும் கயிறுதான் மிகச்சரியானது.இந்த ஓன்று கூடல் ஒற்றுமையின் கூடல் என்றாலும் அதற்காக திருமறையின் உண்மையான கருத்தை வளைக்க முடியாதல்லவா?
ReplyDeleteHaving pirith string and holy water from a monk is allowed ??
ReplyDelete