'பரயா ஸ்டேட்' என்னும் நிலை, தற்போது மாறியுள்ளது - சரத் அமுனுகம
மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்கான உள்ளக விசாரணையின் போது முன்னாள் ஆட்சியாளர்களால் இராணுவத்தினர் நடத்தப்பட்ட முறை இராணுவ வீரர்களை கொல்வதற்காக செய்யப்பட்ட ஒப்பந்தம் எல்.ரீ.ரீ.ஈ.யினருக்கு வழங்கப்பட்ட பணம், அதில் அவர்கள் வாங்கிய துப்பாக்கிகள் உள்ளிட்ட பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடுத்தடுத்து அம்பலத்திற்கு வருமென கருத்திட்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
இலங்கையில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் உலகமே சிறந்த இராணுவ வீரரென புகழ்பாடும் மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஜம்பர் அணிவித்த முன்னாள் ஆட்சியாளர்களுக்கு இராணுவ வீரர்களின் நலன் குறித்து பேசுவதற்கு அருகதை இல்லை என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, ராஜபக்ஷ அரசாங்கம் பின்பற்றிய வெளிநாட்டுக் கொள்கையினால் இலங்கைக்கு ஏற்பட்டிருந்த ஆங்கிலத்தில் தெரிவிக்கும்படியான ‘பரயா ஸ்டேட்’ என்னும் நிலை தற்போது மாறியிருப்பதாகவும் அமைச்சர் அமுகனுகம சுட்டிக்காட்டினார்.
கொழும்பு டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
உள்ளக விசாரணையில் இராணுவ வீரர்கள் பற்றிய விவாதம் ஆரம்பிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்களை மேஜர் ஜெனரல் சரத் பொன்சேக்கா முன்வைக்கவுள்ளார்.
இதன்போது இராணுவ வீரர்களை சுடுவதற்காக துப்பாக்கி தாரிகளுக்கு பணம் கொடுத்தது யார்? எல்.ரீ.ரீ.ஈ.னருடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம்? எல்.ரீ.ரீ.ஈ.யினருக்கு பணம் வழங்கியது யார்? அதில் எல்.ரீ.ரீ.ஈ.யினர் கொள்வனவு செய்த துப்பாக்கியின் வகைகள்? உள்ளிட்ட பல தகவல்கள் குறுகிய காலத்திற்குள் அடுத்தது வெளிரவுள்ளதால் உண்மையை தெரிந்து கொள்வதற்காக பொறுமையுடன் காத்திருக்குமாறும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேஜர் ஜெனரல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாராளுமன்றத்திலிருந்து நீக்கப்பட்டார். அவரது ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. அவருடைய காணி பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கை வரலாற்றில் மன்னன் துட்டகைமுனுவிற்கு பிறகு வந்த சிறந்த இராணவு வீரருக்கு அவமானத்தை தேடித்தந்தமைக்காக நான் உள்ளிட்ட அனைவரும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்க வேண்டும். இதற்காக நாம் வெட்கி தலைகுனிவதாகவும் அமைச்சர் சரத் அமனுகம தெரிவித்தார்.
ஒரு சிறந்த இராணுவ வீருக்கு அவமானத்தை தேடித்தந்த எவருக்கும் ஏனைய இராணுவ வீரர்களின் நலன் குறித்து பேச அதிகாரமோ உரிமையோ இல்லை.
மேஜர் ஜெனரல் சரத் பொன்சேக்காவை சிறையில் வைப்பதற்கு பதிலாக கடற்படை தளத்தில் தடுத்து வைக்குமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கூறியிருந்தார். அதற்காக நாம் அவருக்கு நன்றிகளை கூற வேண்டும். இருப்பினும் அந்த வேண்டுதலும் பின்னர் நிராகரிக்கப்பட்டது.
கடந்த காலத்தில் இதுபோன்று இடம்பெற்ற பல விடயங்களுக்கு நியாயம் தேடப்படும். இலங்கை வந்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் உள்நாட்டின் இஷ்டப்படியே விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கியுள்ளார். இது அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கம் முன்னெடுத்து வந்த வெளிநாட்டுக் கொள்கை முற்றிலும் தோல்வி கண்டிருந்தது.
இதனால் சர்வதேசத்தில் இலங்கை ஒதுக்கப்பட்டதொரு நிலையை அடைந்தது. இதனையே ஆங்கிலத்தில் ‘பறயா ஸ்டேட்’ என்று அழைப்பார்கள்.
இதன் காரணமாக நாம் ஜி.எஸ்.பி. பிளஸ் போன்ற சலுகைகளை இழக்க நேரிட்டது. ஆனால் தற்போது இந்நிலைமை மாறியுள்ளது. ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயம் பொருளாதாரத்தில் பாரிய திருப்புமுனையாக அமையுமெனவும் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
எல்லாம் நன்றாகவே இருப்பது போல் தெரிகிறது, ஆனால் முன்னைய ஆட்சியின் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள், தண்டனைகள் என்பன மிகக் குறைந்த வேகத்தில் இருப்பது ஏன்?
ReplyDeleteWonderful shot
ReplyDeleteHow many year you will talk this story without any action against the accuse and wrongdoers.
ReplyDelete