Header Ads



அரச வைத்தியர்களை தரக்குறைவாக பேசி விட்டாராம் - ஹரீனை ஆதரித்தும், எதிர்த்தும் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் ஹரீன் பெனாண்டோ, அரச வைத்தியர்களை தரக்குறைவாக பேசியதாக தெரிவித்து பதுளை மாவட்ட அரச வைத்தியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இன்று (23) நண்பகல் 12.00 மணி தொடக்கம் பி.ப. 1.00 மணி வரை இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், மருத்துவர்கள் பதாதைகளை தாங்கிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

இதேவேளை அரச வைத்தியர்களின் ஆர்ப்பாட்டத்தை கண்டித்து, அமைச்சர் ஹரீன் பெனாண்டோவின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில், குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்கும் வகையில் பெருமளவான பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆயினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டுக்கடங்காத வகையில் செயற்பட்டதன் காரணமாக கலகம் அடக்கும் பொலிசாரின் மூலம் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1 comment:

  1. இந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயல்களை பார்க்கின்ற போது அவர்களின் கடந்த காலத்தின் மீது சந்தேகமே வலுக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.