“பொறுத்தது போதும், ஒழுக்க விதிகளை மீறுவோரை கட்சியிலிருந்து நீக்குவோம்” - மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எட்டு உறுப்பினர்கள் நீக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எட்டு உறுப்பினர்கள் குறித்து தீர்மானிக்கும் நோக்கில் சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட உள்ளது.
கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய இந்த விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜெர்மன் விஜயத்திற்கு முன்னதாக இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் கட்சியின் தலைமத்துவத்தையும் விமர்சனம் செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க இந்த விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று சபையினால் நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணைகளன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் எட்டு சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டதன் பின்னர் அது குறித்து நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 8ம் திகதி நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் “பொறுத்தது போதும் ஒழுக்க விதிகளை மீறுவோரை கட்சியிலிருந்து நீக்குவோம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Post a Comment