Header Ads



மகிந்தவுக்கு துமிந்தவின், சூடான பதில்கள்..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சவால் விடுக்கும் பலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு கிடையாது என அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் செயலாளருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு, மற்றுமொரு தெரிவில் கட்சியொன்றை அமைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்தக் கட்சியைக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சவால் விடுக்கவோ அல்லது அச்சுறுத்தல் விடவோ முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் ஒட்டு மொத்த உறுப்பினர்களையும் முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றிச் செல்லக்கூடிய அளவு உறுப்பினர்களைக் கொண்ட பல கட்சிகள் நாட்டில் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஓர் கட்சியை வேண்டுமானால் மஹிந்த ராஜபக்ஸவினால் உருவாக்கிக்கொள்ள முடியும் எனவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அதில் அங்கம் வகிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்தக் கட்சியைக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகிப்பதற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே வழியமைத்தது என அவர் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.