ஹுஸைன் வந்து சென்றபின், அபாயம் ஏற்பட்டுள்ளது - மஹிந்த ராஜபக்ஸ
கலப்பு நீதிமன்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படக்கூடிய சாத்தியம் தொடர்ந்தும் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னின் இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து இந்த அபாயம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
தங்காலையில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.படையிர் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்காவிட்டால் சயிட் அல் ஹூசெய்ன் இலங்கைக்கு விஜயம் செய்திருக்க வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் போது படைவீரர் எவரேனும் குற்றம் இழைத்திருந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஹூசெய்ன் தெளிவாக கூறியிருந்தார் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.அதாவது ஒட்டுமொத்த படையினரும் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்பதே அதன் அர்த்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களுக்கு என்ன சொல்லப்பட்டாலும் சர்வதேச சமூகத்திடம் நாடு காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது நிதர்சனம் என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
Mahinda is showing all the forces had involved in war crimes
ReplyDeleteநாட்டில் உள்ள பிரச்சினைகளை விட்டுப்போட்டூ உன்னுடைய குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை போய் பார்த்துக் கொள்
ReplyDeleteகூட்டிவிட்டு கூத்துப்பார்க்கும் கூட்டம்போல் பேசிதீர்வு கானமுடியாது பாராலுமன்ரினுல் கல்லெரிவதற்கும் முயற்சியெடுக்கின்றார்கள் இவர்களுக்கு வாக்களித்து தெரிவு செய்பவர்கள் இனியாவது திருந்தமாட்டார்களா....
ReplyDeleteஅபாயம் யாருக்கு ? யாருக்கோ.... வடிவேல் காமெடி வேணாம் சார்
ReplyDeleteஏன்? கோத்தபாயவின் கிரீஸ் பூதம் நள்ளிரவில் வந்து உன்னை பயங்காட்டுகிறதா? மந்திரத்தை ஊதி கட்டிலில் விடியும்வரை உன்னோடு படுக்கவை.வைகறைவிடிய இற்றைக்கு இறைத்தது போதும் நாளை போய் வருகிறேன் என்று சொல்லும்.
ReplyDelete