முன்னேறிவரும் முஸ்லிம் நாடான, துருக்கியின் கொள்கையை நாம் பின்பற்ற வேண்டும் - கபீா் ஹாசீம்
(அஷ்ரப் ஏ சமத்)
துருக்கி - இலங்கை வா்த்தக சங்கம் இலங்கை - துருக்கி முதலீட்டாளா்களை இரு நாடுகளில் முதலீட்டு வா்த்தக நடவடிக்ககைகளுக்கு அழைப்பு விடுக்கின்றது. மேற்படி கூட்டம் கொழும்பு ரமடா ஹோட்டலில் நடைபெற்றது. இதற்கு பிரதம அதிதியாக அமைச்சா் ஹபீா் ஹாசீம் கலந்து கொண்டாா்.
கே.பி.எம் கணக்காய்வு நிறுவனத்தின் பிரநிதி சு ரேஷ் பேரோ இலங்கையின் புதிய வா்த்தக கொள்கை பற்றி இங்கு உரையாற்றினாா் அத்துடன் வா்த்தக சங்கத் தின் தலைவா் மிஹ்லாா் றியாஸ் உரையாற்றினாா்.
இங்கு உரையாற்றிய அமைச்சா் ஹபீா் காசீம் -
தற்போதைய வா்த்தக சந்தையில் மிகவும் 17வது இடத்திற்கு துருக்கி முன்னேறி வந்துள்ளது. கடந்த காலங்களில யுத்தத்தினால் பாதிகக்ப்பட்ட நாடு உலகில் முதல்தர சீமெந்து உற்பத்தி , மற்றும் துருக்கி விமான போக்குவரத்து உயா் கல்வி போன்றவற்றில் முன்னேறிவரும் ஒரு ஜரோப்ப முஸ்லீ்ம் நாடாகும். அவா்களது வா்த்தக கொள்கையை நாமது நாடும் பின்பற்றல் வேண்டும். ஆனால் எமது நாட்டில் 5 ஆண்டுக்கொரு முறை நாம் காலை மாலைக்கு உடை மாற்றுவது போன்று நமது வா்த்தக கொள்கைகளை மாற்றுகின்றோம். எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஒரு நிலையான மாற்றமுடியாத கொள்கை இருக்க வேண்டும். அதுவே எமது நாட்டில் முதலீட்டாளா்கள் முதலிட வசதியாக இருக்கும் என கூறினாா்
Post a Comment