நாரஹேன்பிட்டி அபேராம விகாரையில், அரசியல் கூட்டங்களைநடத்த நீதிமன்றம் தடை
நாரஹேன்பிட்டி அபேராம விகாரையில், அரசியல் கூட்டங்களையோ, அல்லது வர்த்தக கூட்டங்களையோ நடத்துவதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று தடைவிதித்துள்ளது.
அபேராம விகாரையில், அரசியல் கூட்டங்களையோ அல்லது வர்த்தக கூட்டங்களையோ நடத்துவதற்குத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, கிருலப்பனை, பூர்வாராமய விகாரையின் தலைமை பிக்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அபேராம விகாரை, அரசியல் கூட்டங்களுக்காக பயன்படுத்தப்படுவதால், பௌத்தர்கள் மத்தியிலும் ஏனைய பிக்குகள் மத்தியிலும் மதிப்பிழந்து உள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 15ஆம் நாள் நடைபெறவுள்ளது.
மகிந்த ராஜபக்ச ஆட்சியை இழந்த பின்னர், கடந்த ஒரு ஆண்டு காலமாக, அபேராம விகாரையையே அரசியல் நடவடிக்கைகளைக் கையாளும் மையமாக பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment