Header Ads



யோசித்த + ஞானசாரர் குறித்து சிறை அதிகாரிகள் பகிரங்க குற்றச்சாட்டு

யோஷித்த ராஜபக்ச மற்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் ஆகியோர் சிறையில் தொலைபேசிகளை பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள்  கவனத்தில் கொள்ளாமை தொடர்பில் சிறை அதிகாரிகள் சிலர்  ஹோமாகம மற்றும் கடுவலை நீதவான்களுக்கு பகிரங்க கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

ஜனவரி 31 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச உட்பட சிலர் விளக்கமறியலில் இருக்கும் யோஷித்த உள்ளிட்ட கைதிகளை சந்தித்து பேசிவிட்டு திரும்பிச் சென்றனர்.  இவர்களை சந்தித்து பேசி பின்னர், யோஷித்த ராஜபக்ச இரும்பு கதவை திறந்து கொண்டு தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்குள் செல்லும் போது அவரது கையில் இருந்த தொலைபேசி கீழே விழுந்தது.

விழுந்த தொலைபேசி எடுத்துக்கொண்டு யோஷித்த உள்ளே ஓடினார். இந்த சம்பவம் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவின் அத்தியட்சகர்  சோமவன்ஸ உட்பட இரண்டு அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. எனினும் இந்த அதிகாரிகள் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.

வழமையாக கைதி ஒருவரிடம் தொலைபேசி இருப்பது தெரியவந்தால், அவர் இருக்கும் சிறையில் தேடுதல் நடத்தப்பட்டு தொலைபேசியும் அந்த நபரை சிறைச்சாலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தண்டனை வழங்கப்பட வேண்டும்.

சாதாரண கைதி ஒருவர் இவ்வாறு தொலைபேசியுடன் சிக்கினால் அவருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்படும். எனினும் யோஷித்த ராஜபக்ச இன்னும் சிறையில் தொலைபேசியை பயன்படுத்தி வருகிறார். இது சிறையில் பகிரங்மான இரகசியமாகும்.

அதேவேளை வெலிகடை சிறைச்சாலை வைத்தியசாலையில் மூன்றாம் இலக்க விடுதியில் கட்டில் வழங்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிக்கும் ஞானசார தேரரும் தொலைபேசி ஒன்றை பயன்டுத்தி வருகிறார். இதனை அதிகாரிகள் அறிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால்,  நீதவான்கள் இது குறித்து கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கைதிகள் தொடர்பான இறுதியான பொறுப்பு நீதிமன்றத்திற்கே இருப்பதாகவும் அந்த கடிதங்களில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. சட்டம், நீதி,ஒழுங்கு,மற்றும் சிரைச்சாலைக்கு பொருப்புடைய அமைச்சர்களே...நல்லாட்சியில் நாற்றம் எடுக்கின்றன இதை சுத்தப்படுத்துவது உங்களது கடமையள்ளவா......

    ReplyDelete
  2. புதிய கடவுளர்கள் ஆணையிட்டாலும் பூசாரிகள் இன்னும் பழைய கடவுளர்களின் மூளைச்சலவையிலிருந்து விடுபடவில்லை. அல்லது நல்லாட்சி கவிழ்ந்து, மீண்டும் பழைய கடவுளர்கள் வந்துவிட்டால் என்ன செய்வது எனும் மிரட்சியாகக்கூட இருக்கலாம்.

    எது எவ்வாறாயினும், கடமையில் நேர்மை தவறியமைக்காக குறித்த அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டாக வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.