"மனப்பால் குடிக்கிறார்கள்"
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் செயற்பாடுகள் முட்டாள்தனமானவை என்று அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கடுமையாக சாடியுள்ளார்.
சமூக வலுவூட்டல் மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் திசாநாயக்க,
திவிநெகும திணைக்களம் உருவாக்கப்பட்டமை ஒரு முட்டாள்தனமான தீர்மானமாகும். முன்னைய அமைச்சர் ஒருபோதும் அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்காது தனித்தீர்மானத்தின் பிரகாரம் செயற்பட்டமையே அதற்கான காரணமாகும்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சைக் கொண்டு ஏராளம் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்திருக்க முடியும். அதுவும் நடைபெறவில்லை.
இவற்றுக்கெல்லாம் காரணம் முன்னைய அமைச்சர் தனது ஜனாதிபதி சகோதரரின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு செயற்பட்டதுதான். அவர் ஒருபோதும் ஏனையவர்களின் கருத்துக்களை செவிமடுக்கவில்லை.
தேசிய அரசாங்கம் விரைவில் கவிழ்ந்துவிடும் என்று ஒருசிலர் மனப்பால் குடிக்கின்றார்கள். ஆனால் எத்தனை தடைகள் வந்தாலும் தேசிய அரசாங்கம் ஒருபோதும் கவிழாது என்றும் அமைச்சர் திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment