Header Ads



ராஜிதவின் உடல்நலம் விசாரிக்க, சிங்கப்பூர் சென்றுள்ள மைத்திரி


அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சுகம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று -27- அதிகாலை சிங்கப்பூர் பயணமாகியுள்ளார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகயீனம் காரணமாக தற்போது சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பயணமான நேரத்தில் ஜனாதிபதி ஆஸ்திரியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன் காரணமாக இலங்கையில் வைத்து அவரது சுகம் விசாரித்தறிந்து கொள்வதற்கான வாய்ப்பு ஜனாதிபதிக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில் இன்று அதிகாலை அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தித்து சுகம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூர் பயணமாகியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்களுக்கான நுழைவாயில் வழியாக சாதாரண பயணிகள் விமானமொன்றில் ஜனாதிபதி சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலையத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.