“தேச நலன்களுடன்கூடிய, சமூக நலன்கள்”
கடந்த 06.01.2016 திகதி சகோதரத்துவ ஊடகக் கூட்டமைப்பினால்- BMF ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த செய்திக் குறிப்பில் பின்வரும் தகவல்கள் சொல்லப்பட்டிருந்தது.
இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கம், புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் ஒன்றினை மேற்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
இவ் அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்கு சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகளை ஒன்றிணைத்து கலந்துரையாடல் ஒன்றினை நடாத்த ஏற்பாடுகளைச் சகோதரத்துவ ஊடகவியலாளர் ஒன்றியம் (BUF) ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இது தொடர்பான ஆலோசனைகளை வழங்க விரும்புகின்றவர்கள் தங்களது கருத்துக்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு சகோதரத்துவ ஊடகவியலாளர் அமைப்பின் தலைவர் L.A.U.L.M. நளீர் ஊடகங்களுக்குத் தெரிவிக்கின்றார்.
இக்கலந்துரையாடல் நடைபெறும் திகதி, இடம் விரைவில் அறியத்தரப்படும் என்றும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்
இதில் பெரும்பாலும் சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கவனத்திற் கொள்ளவேண்டியுள்ளது.
இதன் அடிப்படையில் சில பரிந்துரைகளை தயாரித்து அதனை அரசாங்கத்திற்கு கொடுப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
“தேச நலன்களுடன் கூடிய சமூக நலன்கள்”
இதன் படி பல சந்திப்புக்களை இந்த ஊடக அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அந்தச் சந்திப்புக்களின் போது பெற்றுக் கொள்ளப்பட்ட கருத்துகளுடன் ‘தேச நலன்களுடன் கூடிய சமூக நலன்கள்’ என்ற தொனிப் பொருளில் தமது ஆலோசனைகள அடுத்த வாரம் (16.02.2016) புதிய யாப்புத்திருக்கக் குழு முன்னால் (BMF) சமர்ப்பிக்கவுள்ளது.
எனவே இது தொடர்பான ஆலேசனைகளைத்தர விரும்புகின்ற சகோதரர்கள்-அமைப்புக்கள் 14.02.2016 திகதிக்கு முன்னதாக அவற்றை எமக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். மேலதிக தகவல்களுக்கு:0777275758, 0722804514
Post a Comment