"மைத்திரியும், ரணிலும் மனசுவைத்தால்" - அநுரகுமார சுட்டிக்காட்டும் முக்கிய விடயம்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தேவைக்கு அமையவே பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பயங்கரவாதம் பிரச்சினையாகும் போது பயங்கரவாத விசாரணைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. போதைப் பொருள் பிரச்சினையாகும் போது போதைப் தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டது.
அதேபோல் தற்போது நிதி மோசடி பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில், நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி விசாரணைப் பிரிவின் மூலம் கடந்த காலத்தில் பல விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
கிடைத்துள்ள 198 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கிடைத்துள்ள முறைப்பாடுகளில் அமைச்சர்கள், ஜனாதிபதி, ஜனாதிபதியின் சகோதரர்கள், ஜனாதிபதியின் உறவினர்கள், அரசாங்கத்தின் பிரதான அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
198 முறைப்பாடுகளில் 35 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் முடிக்கப்பட்டு அடுத்த கட்ட விசாரணைகளுக்கு அனுமதி கோரி சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எனினும் சட்டமா அதிபர் திணைக்களம் 4 விசாரணைகைளுக்கான அனுமதியை மாத்திரமே இதுவரை வழங்கியுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடக்கி வருகிறது.
விசாரணைகளை தடுத்து நிறுத்த ஒரு புறம் சட்டமா அதிபர் திணைக்களத்தையும் மறுபுறம் அரசியலையும் இந்த அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது.
கொள்ளைகளுக்கு இரண்டு தரப்பினராலேயே தண்டனை வழங்க முடியாது. ஒன்று கொள்ளையடிப்பவர்கள் மற்றைய தரப்பு கொள்ளையடிப்பதை வேடிக்கை பார்க்கும் தரப்பு.
இவர்களை தவிர ஏனைய தரப்பினர் மோசடியாளர்களை கைது செய்து, தண்டனை வழங்கி, அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால், இந்த அரசாங்கம் அதனை செய்யாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் விசாரணைகளை நடத்தும் நிறுவனங்களில் தலையிடாது, அதிகாரிகள் சுதந்திரமாக விசாரிக்க இடமளித்தால், அடுத்த மூன்று மாதங்களில் வரிசையாக பலர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Enter your comment...சிறுபான்மை மக்களின் மனதில் இடம் பெற்றுள்ள மக்கள் கட்சி மக்கள் விடுதலை முன்னணி ஆகும் ..
ReplyDelete