தமிழில் தேசியக் கீதம் பாடியமைக்கு, எதிராக வழக்குத்தாக்கல்
சுதந்திர தினத்தின் தேசிய வைபவத்தில் தேசிய கீதத்தை தமிழ்மொழியில் பாடப்பட்டமையானது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அவ்வாறு பாடப்பட்டமையால் அடிப்படைய உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். களனி கல்பொருள்ளயை வதிவிடமாகக் கொண்ட சன்ஜீய சுதன் பெரேரா, பேலியகொடையை வதிவிடமாகக் கொண்ட பிரதீப் ஆசிரி சொய்சா மற்றும் களனியை வதிவிடமாகக்கொண்ட தொன் பிரேமரத்ன ஆகியோரே இந்த மனுவைத்தாக்கல் செய்துள்ளனர்.
Trying to earn only Cheap publicity
ReplyDelete