Header Ads



சரணடைந்தார் அசாதுதின் ஒவாய்சி

ஐதராபாத்தில் காங்கிரஸ் தலைவர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று சரண் அடைந்த மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவாய்சி, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஐதராபாத்தில் கடந்த 2ம் தேதி நகராட்சித் தேர்தல் நடைபெற்றபோது காங்கிரஸ் கட்சியின் எம்எல்சி ஷபீர் அலி, தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அகில இந்திய மஜ்லிஸ் யே இத்திஹாதுல் முஸ்லிமீன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவாய்சி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் முன்னலையில் ஒவாய்சி சரண் அடைந்தார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மஜ்லிஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் சிலரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், மஜ்லிஸ் கட்சியினரை தாக்கியதாக ரெட்டி, அலி மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.